மிக இயல்பான ஒரு கதாபாத்திரம். படத்தில் விஜய் சேதுபதி சற்று காது கேளாதவராக நடித்துள்ளார். எனவே அவரை காதலிக்கும் நான் சத்தமாக பேசவேண்டும். இயல்பாகவே நான் சற்று சத்தமாக பேசுவேன். எனவே என்னை தேர்வு செய்து இருக்கிறார்கள். என்னை கடத்தி சென்று விடுகிறார்கள். அவர்களிடம் இருந்து 36 மணி நேரத்தில் விஜய்சேதுபதி எப்படி மீட்கிறார் என்பதே கதை.
இறைவி படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் நடித்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. காரணம் இதன் கதைக்களம் புதிது. அவரது மகன் சூர்யா சேதுபதி துருதுருவென இருப்பான். ஆனால் காட்சிகளில் சிறப்பாக நடித்து அசரடிப்பான். அவன் என்னை அஞ்சலி அக்கா என்று அன்புடன் அழைப்பான்.

என் அம்மா என்னை தான் பேய் என்று சொல்வார்கள். ஐதராபாத்தில் ஒரு படப்பிடிப்பில் நாங்கள் தங்கி இருந்த இடத்தில் பேய் இருப்பதாக சொன்னார்கள். நான் பார்க்கவில்லை. பேய் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஹீரோக்கள் யாராவது உங்களிடம் காதலை சொல்லி இருக்கிறார்களா?
இல்லை. நான் நடித்த ஹீரோக்களில் பெரும்பாலானவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதே… ஜெய்க்கு தான் இன்னும் ஆகவில்லை. எப்போது பண்ணப்போகிறார் என்று தெரியவில்லை.
தினமும் பேசுவதில்லை. எப்போதாவது பேசுவேன். யாருடனும் தினசரி பேசும் வழக்கம் எனக்கு இல்லை. எனக்கு சினிமாவை விட வெளியில் தான் நண்பர்கள் அதிகம்.
வீடு ஐதராபாத்தில் இருந்தாலும் பெரும்பாலும் சென்னையில் தான் இருக்கிறேன்.
ஆமாம். இந்தியில் மாதவன், அனுஷ்கா நடிக்கும் சைலன்ஸ் படத்தில் போலீசாக நடிக்கிறேன்.
இல்லவே இல்லை.
எப்போது திருமணம்? தமிழ் பையனை திருமணம் செய்துகொள்வீர்களா?
நிச்சயமாக. தமிழ் பையனை திருமணம் செய்துகொள்ள தான் விருப்பம்.