full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஆகஸ்டு 17 முதல் அண்ணனுக்கு ஜே!!

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வெற்றி மாறனின் “Grass Root Film Company” நிறுவனமும் “20th Century Fox” நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் “அண்ணனுக்கு ஜே”.

தற்கால அரசியலை நையாண்டி (political satire) செய்யும் இந்த திரைப்படத்தில், “அட்டக்கத்தி” தினேஷ் கதாநாயகானாக நடித்திருக்கிறார். மஹிமா நம்பியார் கதா நாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும், ராதா ரவி, மயில்சாமி, வையாபுரி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இசை – அரோல் கொரேலி, ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி, படத்தொகுப்பு – G.B.வெங்கடேஷ். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பவர் ராஜ்குமார்.

இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். இத்திரைப்படம் ஆகஸ்டு 17 வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.