மீண்டும் வில்லனாக மிரட்ட வரும் குரு சோமசுந்தரம்

cinema news
0
(0)
 
மின்னல் முரளி சிபுவாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த குரு சோமசுந்தரம் குரு பிரம்மாவாக பெல் என்கிற திரைப்படத்தில்  கதையின் வில்லனாக நடிக்கிறார். தவறான ஒருவனுக்கு கிடைத்து விடக் கூடாத ஒரு ரகசியம்.
 
பன்னெடுங்காலமாக அந்த ரகசியத்தை பாதுகாக்கும் பரம்பரையின் கடைசி ஒருவனான கிரகாம் பெல் என்ற  பார்வைத் திறனற்ற தனிநபரின் கதையே Bell.  பெல் அவன் வாழ்கையில் மற்றவர்களை எப்படி பார்க்கிறான் என்பது திரைக்கதை.    இத்திரைப்படம் ஏற்காடு மற்றும் மலைப்பகுதிகளில் மட்டுமே 60 நாட்களில்  உருவாகியுள்ளது.
Brogan movies    தயாரிக்கும் இத்திரைப்படத்தில் நிதிஷ் வீரா மற்றும் கலைமாமணி ஸ்ரீதர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்  ராபர்ட் இசை அமைத்திருக்கிறார் பீட்டர் சக்ரவர்த்தி பாடல்கள் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பரணிகண்ணன் கதை வசனம் வெயிலோன். திரைக்கதை இயக்கம் R வெங்கட் புவன். திரைப்படத்தை புரோகன் மூவிஸ் தயாரித்துள்ளது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் பீட்டர் சக்கரவர்த்தி மற்றும் டேவிட் நலச்சக்கரவர்த்தி இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.