full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அமைதி காக்கும் அனுஷ்கா

‘பாகுபலி-2’ படத்துக்குப் பிறகு பிரபாஸ் – அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அவர்கள் மறுத்தனர்.

அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் தயாராகும் ‘சாஹோ’ படத்தில் பிரபாஸ் ஜோடியாக அனுஷ்கா நடிக்கப்போவதாக தகவல்கள் வந்தன. அதுவும் இல்லை என்று ஆனது. பிரபாஸ் ஜோடியாக இந்தி நடிகை ‌ஷரத்தா கபூர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது ‘சாஹோ’ படத்தில் நடிக்க பிரபாஸ் தயாராகிவிட்டார்.

அனுஷ்கா ‘பாகுபலி-2’-ல் நடித்தபோது ‘பாக்மதி’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வந்தார். இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, யோகா காரணமாக உடல் மெலிந்து வழக்கமான உடல்கட்டுக்கு வந்துவிட்டார்.

என்றாலும், எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. எனவே, அனுஷ்கா திருமணத்துக்கு தயாராகி வருகிறார் என்று தெலுங்கு பட வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. பிரபாசை அவர் திருமணம் செய்து கொள்வதாக வந்த செய்தியை உடனே அனுஷ்கா மறுத்தார். ஆனால் இப்போது அவர் திருமணத்துக்கு தயாராகி வருகிறார் என்ற செய்திகளுக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. எனவே அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.