full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ரூபாவாக அனுஷ்காவா? நயன்தாராவா?

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அங்கே சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்படுவதாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா குற்றம் சாட்டினார். மேலும் அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரூபாவின் இந்த குற்றச்சாட்டை சிறைத்துறை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். மேலும் அவரை அதிரடியாக பணியிடமாற்றமும் செய்தனர்.

ஆனாலும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ரூபா, தான் கூறியது அனைத்தும் உண்மைதான் என்றும், தன் மீது வழக்கு போட்டால் சந்திக்க தயாராக இருப்பதாகவும் துணிச்சலாகக் கூறினார்.

இந்நிலையில் ரூபாவின் அதிரடி நடவடிக்கைகளைத் திரைப்படமாக்க இயக்குனர் ரமேஷ் என்பவர் முடிவு செய்தார். அது தொடர்பாக ரூபாவை அவரது அலுவலகத்துக்கு சென்று நேரில் சந்தித்துப் பேசிய போது, திரைப்படம் எடுப்பதற்கு ரூபாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் ரமேஷ் கூறும் போது, “இந்த படம் சிறை விதிமீறல், முறைகேடுகள் பற்றியது என்றாலும் ரூபா இதுவரை பணியாற்றிய மற்ற வழக்குகளின் விவரங்களும் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.

ரூபா வேடத்தில் நடிக்க அனுஷ்கா அல்லது நயன்தாராவிடம் பேச முடிவு செய்துள்ளோம்.” என்றார்.