காத்திருந்த இயக்குநருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி : அனுஷ்கா

News

அனுஷ்கா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறார். பாகுபலி, பாகுபலி-2 படங்கள் அவரது திறமையை வெளிப்படுத்தின. அதனைத் தொடர்ந்து அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள படம் ‘பாகமதி’. இந்த படத்திலும் வித்தியாசமான நடிப்பால் கவர்ந்திருக்கிறார்.

இந்த படம் தெலுங்கில் ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. எதிர்பார்த்ததை விட இது அதிக வசூல் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் தமிழிலும் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் அனுஷ்கா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இது பற்றி கூறிய அவர், “எனது திரை உலக வாழ்வில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய படமாக இது உருவாகி இருக்கிறது. எனக்காகவே 4 வருடங்கள் காத்து இருந்த இயக்குனர் அசோக், படக்குழுவினர், அன்பு ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.