ஆர்யாவை தேடிய அபர்ணதிக்கு ஜோடி ஜிவி பிரகாஷ்

News
0
(0)

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் அபர்ணதி. இவர் தற்போது நடிகையாக அவதாரம் எடுக்க இருக்கிறார். இவர் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்துராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாளமயம்’, ‘ரெட்டைக்கொம்பு’, ‘கறுப்பர் நகரம்’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் என பல படங்களை கைவசம் வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக வசந்தபாலன் இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கியக் கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷே இசையமைக்கும் இப்படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.