full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மிக மிக அவசரமாக ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஏ.ஆர்.முருகதாஸ்!

‘அமைதிப்படை பார்ட் 2’, ‘கங்காரு’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாகும் ‘மிக மிக அவசரம்’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை நாளை ஏப்ரல் 19 புதன்கிழமை காலை 10 மணிக்கு ட்விட்டரில் வெளியிடுகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் நல்ல விஷயங்களுக்கு முதல் குரல் கொடுப்பவர் என்றால் அவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியாகத்தான் இருக்கும். சுரேஷ் காமாட்சி வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல… இயக்குநரும்கூட. பங்கஜ் புரொடக்ஷன்ஸ் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

மிக மிக அவசரம், இந்தப் படம் பெண் போலீசார் களத்தில் படும் கஷ்டங்களை மிக மிக நுணுக்கமாகச் சொல்லும் படம். படத்தின் டீசர் பார்த்த திரையுலகினர், வியந்து போய், ‘சார் உங்களிடமிருந்து இப்படியொரு உணர்வுப் பூர்மான படத்தை எதிர்ப்பார்க்கவில்லை’ என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த டீசர் மற்றும் ட்ரைலரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவதற்கு முன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஏப்ரல் 19-ம் தேதி (புதன்கிழமை) வெளியாகிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, சுரேஷ் காமாட்சியை ஒரு இயக்குநராக முறைப்படி அறிமுகப்படுத்தி வாழ்த்துகிறார் பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.

“எனது இயக்கத்தில் வரும் முதல் படம் “மிக மிக அவசரம்”. அதன் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் வெளியிடுவதில் மிகப் பெருமை அடைகிறேன்,” என்கிறார் சுரேஷ் காமாட்சி.

இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ளார். அவருடன் ஈ ராமதாஸ், முத்துராமன், ஹரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, சக்தி சரவணன், வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதை வசனத்தை இயக்குநர் ஜெகன்நாத் எழுத, பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்ஸன் எடிட்டிங் செய்துள்ளார்.

திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் சுரேஷ் காமாட்சி. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு இது.