AR.ரஹ்மான் கல்லூரியின் இளம் பட்டதாரி எட்வின் லூயிஸின் “அடியே குட்டி தேவதை” தனிப்பாடலை வெளியிட்டது

Audio Launch
0
(0)
இளம் இசை திறமைகளைக் வெளிக்கொண்டு வரும் சென்னையின் வளமான பாரம்பரியம்தொடர்கிறது.மற்றுமொரு இளம் இசை கலைஞரை AR.ரஹ்மானின் KMMC  இசை கல்லூரி நமக்கு தந்திருக்கிறது. 
 
திரைப்படபாடல்களின் தென்னிந்திய இசை முத்திரையான திங்க் மியூசிக், AR.ரஹ்மான் கல்லூரியின் இளம் பட்டதாரி எட்வின் லூயிஸின் “அடியே குட்டி தேவதை” என்ற மனம் வருடும் துள்ளலான தனிப்பாடலை வெளியிட்டது.

சென்னையில் சேர்ந்த எட்வின் லூயிஸ்,18 வயதிற்குட்பட்டபிரிவுகளின் கீழ் இசையில் தனது பள்ளியிலிருந்து பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர்.

AR ரகுமான் இசை கல்லூரியான KM கான்செர்வடோரி  சேர்ந்த அவரது  Prof மற்றும் Mentor திரு பிரேம்  கூறுகையில், “எட்வின் இயல்பிலேயே நல்ல இசை கலைஞர், எப்போதும் கேட்போரை மனதில் வைத்து இசையமைப்பவர், எங்கள் வகுப்பில் வாரம் ஒரு பாடல் பிரிவில் எல்ல வாரமும் ரசிக்கும்படியாகவும், ஜனரஞ்சகமான பாடல்களை தருவார். அவரது டியூன் சுத்தமாகவும், எளிமையாகவும், தெளிவாகவும் இருப்பதை நான் கவனித்திருக்கிறேன், அவருடைய பாடல்கள் மட்டுமல்ல, அவரது BGM படைப்புகளிலும்ஒரு அற்ப்புதமான க்யூ பாயிண்ட் அமைப்பை  காணலாம். எங்களுக்கு நிச்சயமாக தெரியும் எதிர்காலத்தில் எட்வின் லூயிஸ் ஒரு முக்கியமான இசை அமைப்பாளராக இடம் பிடிப்பார், அவர் KMMC மாணவர் என்பது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி , அவருக்கு எங்களின் வாழ்த்துக்கள்.

திங்க் மியூசிக்  தெரிவிக்கையில், இளம் கலைஞர்களின் திறமைகளை நாங்கள் பெரிதும் நம்புகிறோம். அவர்களை  ஊக்குவிப்பதிலும் அறிமுகப்படுத்துவதிலும் திங்க் மியூசிக் எப்போதும் உறுதுணையாக இருக்கும். எட்வின் எங்களது மற்றுமொரு கண்டுபிடிப்பு அவர் சிறந்த உயரங்களுக்கு செல்லுவார். அவர் வளர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்”

எட்வினின் தனது  பியானோ ஆசிரியர் திரு ஆகஸ்டின் பால்,  Mentor திரு பிரேம்,  திங்க் மியூசிக் VP.சந்தோஷ்குமார்  மற்றும்  திரு மகேஷ் ஆகியோருக்கு தனது  நன்றியைத் தெரிவித்தார், மேலும் “திங்க் மியூசிக் குடும்பத்தில் எனது இசை பயணத்தை தொடங்குவதில்  நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” இந்த தனிப்பாடலுக்கு இவர்கள் தந்த ஆதரவு மற்றும் எனக்கு வழங்கப்பட்ட அன்பான வரவேற்பு குறித்து சொல்ல வார்த்தைகளே இல்லை. எங்களை போன்ற இளம் கலைஞர்களுக்கு இவர்கள் தரும் மதிப்பு அசாதாரணமானது, மிக முக்கியமாக, அவர்கள் இளம்திறமைகளின் எதிர்காலம் குறித்து பெரிதும் அக்கறை காட்டுகிறார்கள். எங்களை போன்றவர்கள் இசை பயணத்தைத் தொடங்க இதுவே ஒரு சிறந்த தளமாகும்,”என்றார்.

பத்து வருடங்களுக்கும் மேலான தீவிர பயிற்சி, மற்றும் சிறந்த செயல்முறை இசைக்கல்வி , இணையவழி இசை மேலாண்மை செயல்முறை பாடம் , மற்றும் பல பன்முக  பயிற்சி கொண்ட இவர்  பாடகரும் கூட , இன்னும்  பல தரப்பட்ட  இசை படைப்புக்களை தரவிருக்கும் இவர் தேர்ந்த இளம் இசை கலைஞனாக அரங்கேறுகிறார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.