full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

‘அறம் செய்து பழகு’ இனி ‘நெஞ்சில் துணிவிருந்தால்’

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹரீன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அறம் செய்து பழகு’ படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

‘அன்னை பிலிம் பேக்டரி’ நிறுவனம் சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இதில் சந்தீப் கிஷன் ஜோடியாக ‘கிருஷ்ணகாடி வீர பிரேமா காதா’ என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹரீன் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.

டி.இமான் இசையமைப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் தலைப்பினை `நெஞ்சில் துணிவிருந்தால்’ என மாற்றியுள்ளனர். இப்படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.

இன்றைய காலத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே பாதி சொத்தை நம்மிடமிருந்து வாங்கிவிடுவார்கள் என்று சொல்லும் அளவுக்கு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. மருத்துவர்களை கடவுளுக்கு நிகர் என்போம், அதை நிஜமாக்கி வாழ்ந்து காட்டியவர் “20 ருபாய் டாக்டர்” என்று அழைக்கப்படும் பால சுப்பிரமணியம். கோவை ராஜ கணபதி நகரைச் சேர்ந்த இவர் சிகிச்சை அளிக்க முதலில் வாங்கிய பீஸ் வெறும் 2 ரூபாய் தான். நாளடைவில் ரூபாயின் மதிப்பு குறைய குறைய தனது தனது பீஸை உயர்த்தி உயர்த்தி 20 ரூபாய்க்கு கொண்டுவந்தார்.

கடைசியாக ஒரு வருடத்துக்கு முன் வரை சிகிச்சை அளிக்க இவர் வாங்கிய தொகை 20 ரூபாய் தான். நாளடைவில் இவரது பெயரே மறைந்து போய், 20 ரூபாய் டாக்டர் என்று பெயர் வந்துவிட்டது. கடந்த வருடம் இவர் இறந்து போன விஷயம் அறிந்த கோவை மக்கள் “ஏழைகளின் தெய்வம், எங்கள் ஐயாவுக்கு இதய அஞ்சலி” என கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினர்.

அந்த அளவுக்கு மிகச்சிறந்த மனிதரான அவரின் மகள், மருமகன், பேரன் உள்ளிட்டோர் இன்று “நெஞ்சில் துணிவிருந்தால்” படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். “நெஞ்சில் துணிவிருந்தால்” படத்தின் கதைக்கும் மருத்துவத் துறைக்கும் சம்பந்தம் உள்ளது. அதனால் இயக்குநர் சுசீந்திரன் இவர்களை அழைத்து கௌரவித்தார்.

`நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த படத்தின் தலைப்பினை சுசீந்திரனின் தந்தை நல்லுசாமி வெளியிட்டார்.