full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அர்ஜூனின் 150வது பட டீசர் விரைவில்

சமீபத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த படங்களின் கதை அம்சமும், படமாக்கப்பட்ட விதமும் தான். இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளிவர தயாராக இருக்கும் படம் தான் “நிபுணன்”.

நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில், அர்ஜூன் நடிக்கிறார். கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில் அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயரப் பறக்கும் ஒரு சாதனையாளனின் கதை தான் இந்த நிபுணன்.

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில், நவினின் இசை அமைப்பில், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பில், உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராமன், மற்றும் அருண் வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் டீசர் வருகிற 15ம் தேதி வெளிவர இருக்கிறது.

இப்படம் அர்ஜூனின் 150வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.