ஸ்டிரைக் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நெருங்கிவிட்டது. இதுவரையில் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் நாளாக நாளாக தயாரிப்பாளர்கள், நடிகர்கள், திரைப்படத் தொழிலாளர்கள் அனைவருமே கலக்கம் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகர் அருள்நிதி தனது கவலையை அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“தயாரிப்பாளர்களின் நலனுக்காக ஒட்டு மொத்த திரையுலகினரும் ஒன்றிணைந்து நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இந்த ஸ்ட்ரைக் இவ்வளவு நாட்களுக்கு நீடிப்பது நல்லதல்ல. கேள்வி கேட்பது எளிதானது என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்தப் பிரச்சனையை ஸ்ட்ரைக் இல்லாமல் எப்படி கையாள்வது என்பதைக் குறித்தும் யோசித்தாக வேண்டும். அதற்காகத் தான் நீங்கள் எல்லோரும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்கள்”, என்று தயாரிப்பாளர் சங்கத்தினருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படம் இந்த மாதம் வெளியிடுவதற்காக வேக வேகமாக தயாராகி வந்தது குறிப்பிடத்தக்கது.