full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

எதிர்பார்ப்புகளை எகிறச் செய்யும் “தடம்”!

“குற்றம் 23” படத்தின் வெற்றிக்குப் பிறகு நிதானமாக அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் அருண் விஜய். காரணம் இத்தனை ஆண்டுகால உழைப்பிற்கு கிடைக்க ஆரம்பித்திருக்கும் அங்கீகாரத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் தவற விட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான்.

தற்போதைக்கு அருண் விஜய், மகிழ் திருமேணி இயக்கத்தில் “தடம்” படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் “செக்கச் சிவந்த வானம்” ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இதில் “தடம்” படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து ரிலீசுக்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மகிழ் திருமேணி – அருண் விஜய் கூட்டணியில் வெளியான “தடையறத் தாக்க” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றதனால் இப்படத்திற்கு பெரும் எதிர் பார்ப்பு நிலவுகிறது.

அது மட்டுமல்லாமல், “தடம்” திரைப்படத்தில் அருண் விஜய் முதல் முறையாக இரண்டு வேடத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளதால் எதிர்பார்ப்பு இரு மடங்காகி உள்ளது!!