டெல்லிக்கு செல்லும் அருண் விஜய், அறிவழகன் இணையும் AV 31 படம் !

News
0
(0)

 

 

25 வருட திரைப்பயணத்தில் நடிகர் அருண் விஜய் தன் ரசிகர்களை, அறிவழகனுடன் இணையும் தனது புதிய படத்தில் அதிரடி ஆக்‌ஷன்  மூலம் அசரடிக்க வருகிறார். இரண்டு வார கால நீண்ட படப்பிடிப்பில் பிரமிப்பான அதிரடி ஆக்‌ஷன்,  மயிர்க்கூச்செரியும் துரத்தல் காட்சிகள் டெல்லி மற்றும் ஆக்ராவில் இப்படத்திற்காக படமாக்கப்படவுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமல்லாமல் ரொமான்ஸ் பொங்கும் பாடல் காட்சிகள் யமுனா நதி கரைகளிலும், டெல்லி மற்றும்  ஆக்ரா மார்க்கெட் வீதிகளில் படமாக்கப்படவுள்ளது. “குற்றம் 23” எனும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஈரம் அறிவழகன் இப்படத்தில் மீண்டும் அருண் விஜய்யுடன் இணைகிறார்.

இத்திரைப்படத்தில் ரெஜினா கஸண்ட்ரா நடிகர் அருண்விஜய்யுடன்  முதல் முறையாக இணைந்து நடிக்கிறார். Miss Teen International 2016 புகழ் ஸ்டெஃபி படேல்  இப்படம் மூலம் தமிழ்  சினிமாவில்  அறிமுகமாகிறார். பகவதி பெருமாள் எனும் பக்ஸ் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். புகழ்வாய்ந்த ஒளிப்பதிவாளர் B ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, இளம் உள்ளங்களின் நாயகன் சாம் CS இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது வென்ற ஷாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார். சக்தி வெங்கட் ராஜ்  கலை இயக்கம் செய்கிறார்.

பிரமாண்ட பொருட்செலவில் சென்னை, டெல்லி, ஆக்ரா, ஹைதராபாத் பகுதிகளில் படம்பிடிக்கப்படும் இத்திரில்லர் திரைப்படத்தை விஜயராகவேந்திரா Allin Pictures சார்பில் தயாரிக்கிறார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.