full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அருண்ராஜாவுக்கு கிடைத்த ஆதரவுக்குரல்

நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக இயக்குநராக புதிய அவதாரம் எடுத்திருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.

அவர் இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ள படத்தின் கதைக் களமும் இதுவரை யாரும் தொடாத, பெண்கள் கிரிக்கெட்டை பற்றியது என்பதால் அதுவே சினிமா ரசிகர்களிடையே சூடான செய்தியாக பரவி வருகிறது. இந்த செய்தி வெளியாகியதை அடுத்து இந்திய கிரிக்கெட் அணி சார்பில் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள தேவிகா பல்சிகர் இப்படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமில்லாமல் இப்படத்திற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

அவரின் இந்த அறிவிப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவரது உதவியை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதாகவும், இப்படத்தின் தரத்திற்கும், விளம்பரத்திற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும் எனவும் அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார்.

இப்படத்தில் இந்திய பெண்கள் அணியை சேர்ந்த யாரேனும் நடிக்க விரும்பினால் தான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் அருண்ராஜா கூறியுள்ளார். பெரிய அளவில் இப்படத்திற்கான நடிகைகள் தேர்வு நடத்தப்படவுள்ளது. கிரிக்கெட் ஆடத் தெரிந்த, நன்கு நடிக்கவும் தெரிந்த பெண்களுக்கு இந்த தேர்வு ஒரு அருமையான வாய்ப்பாக அமையும் என நம்பப்படுகிறது.