full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

அரவிந்த்சாமி சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது

ஒரு படத்தின் பூஜை நிகழ்வே பெரிய உற்சாகத்தைத் தந்தால் அந்தப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல கொண்டாட்டத்தை தரும் படமாகத்தான் அமையும். ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்குரிய படமாக பூஜை அன்றே உணரப்பட்டுள்ள படம் சன்தோஷ் P. ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருக்கும் டிடைக்டிவ் திரில்லர் படம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது. பூஜையில் படத்தின்  ஹீரோ அரவிந்த்சாமி, இயக்குநர் சன்தோஷ் P.ஜெயக்குமார், தயாரிப்பாளர் V.மதியழகன்,
இசை அமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் பள்ளு, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், கலை இயக்குநர் செந்தில் ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் படத்தின் பூஜையில் கலந்துகொண்டு படத்திற்கு வாழ்த்து தெரிவிக்க, நடிகர் கெளதம் கார்த்திக், இயக்குநர் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், ஹன்சிகா நடிக்கும் ‘மகா’ படத்தின் இயக்குநர் U.R ஜமீல், இயக்குநர் ப்ரவின் காந்த், தயாரிப்பாளர்கள் ஸ்டுடியோ கிரீன் K.E ஞானவேல்ராஜா, சக்திவேல் பிலிம் பேக்டரி B.சக்திவேலன், தங்கராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவில் ஒருசில கூட்டணி பற்றிய அறிவிப்பு வரும்போதே  அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விடும். அப்படியான எதிர்பார்ப்பை முதல் அறிவிப்பிலே  ஏற்படுத்தியுள்ளது நடிகர் அரவிந்த்சாமி இயக்குநர் சன்தோஷ் P ஜெயக்குமார் கூட்டணி.
ஹரஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்ந் ஆகிய படங்களின் வணிக ரீதியான வெற்றியைத் தொடர்ந்து சன்தோஷ் P. ஜெயக்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். படத்தின் கதையை தன் போக்கிற்கு கொண்டு செல்லாமல் ரசிகனின் ரசனை அறிந்து கொண்டு செல்லும் போது அந்தப்படம் நிச்சயம் வெற்றிக்கோட்டை அடையும். அப்படியான படமாகத் தான் இந்தப்புதிய படம் துவங்கி இருக்கிறது. நடிகர் அரவிந்த்சாமி ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றால் அந்தப்படம் கவனிக்கப் படும் படமாகத் தான் இருக்கும். டிடைக்டிவ் திரில்லர் சம்பந்தப்பட்ட இந்தக்கதையில் அரவிந்த்சாமி புலனாய்வுத் துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார். Etctera entertainment சார்பில் V.மதியழகன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜுன் மாதம் துவங்க இருக்கிறார்கள்.
காட்சிகளுக்கான உணர்வை பின்னணி இசையிலும் பாடல்களிலும்  கச்சிதமாக கொண்டு வரும் டி.இமான் தான் இப்படத்தின் இசை அமைப்பாளர்.
பள்ளு ஒளிப்பதிவு செய்ய எடிட்டிங் பொறுப்பை பிரசன்னா ஜிகே ஏற்றுள்ளார். கலை இயக்குநர் செந்தில் ராகவன், சண்டைப்பயிற்சி தினேஷ் சுப்பராயன்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கதாநாயகி தேர்வும் பிற நடிகர்களின் தேடலும் நடைபெற்று வருகிறது. V.மதியழகன் இதுவரை தயாரித்தப் படங்களில் இந்தப்படம் தொழிழ்நுட்ப ரீதியாகவும் பிரம்மாண்ட படைப்பாக்கத்திலும் பெரிய படமாக உருவாக இருக்கிறது.