எப்படியெல்லாம் கேம் ஆடுறாங்கப்பா!

News

கடந்த வாரம் நடிகர் ஆர்யா ட்விட்டரில், “எனக்கு கல்யாண ஆசை வந்திடுச்சிங்கோ, ஆனா பொண்ணே கிடைக்கலீங்கோ.. என்னைக் கல்யாணம் கட்டிக்க விருப்பம் இருந்தா ப்ளீச் இந்த நம்பெர்க்கு கால் பண்ணுங்கோ” என்று வீடியோ ஒன்று அப்லோடியிருந்தார்.

ஆர்யாவைத் திருமணம் செய்ய பெண் இல்லை என்பதெல்லாம், “ரிசெர்வ் பேங்கிலேயே பணம் இல்லை” என்பது போன்று காதில் டன் கணக்கில் பூ சுற்றும் வேலை. ஆனால் அந்த வீடியோவை பார்த்த பலருமே நம்பியிருப்பார்கள். இதுவரை கால் செய்து பல்ப் வாஙியவர்கள் எத்தனை பெண்கள் என்று தெரியவில்லை பாவம்.

நமக்கு இந்த வீடியோவைப் பார்த்ததுமே சந்தேகம் எழுந்தது. சரி, என்னதான் நடக்கிறதென்று அந்த எர்வாமேட்டின் ஃபேன்சி நம்பருக்குக் கால் பண்ணினோம். எதிர்பார்த்தது போலவே தமிழுக்கு எண் ஒன்றை அமுத்தவும், பக்கத்திலிருக்கும் ஆயாவை அமுக்கவும் (ஆர்.ஜே.பாலாஜி காமெடி) கதையாக ஆர்யா வாய்ஸ் ரெக்கார்டிங் கேட்டது. பாவம்யா பொண்ணுங்க.

சரி..போயிதான் பார்ப்போமே என்று போனால், உள்ள உள்ள அத்தனையும் ஏதோ கேம் ஷோவிற்கான எண்ட்ரி லெவல் பொலவே தோன்றியது. ஒரு கட்டத்தில் ஆகா இவிய்ங்க பொண்ணுங்கள குறி வச்சு மொரட்டுத் தனமான கேம் ஷோவிற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உறுதியானது.

ஏன் பாஸு.. போயும் போயும் ஒரு டிவி புரமோஷனுக்கெல்லாமா இப்படி பண்ணுவாங்க. நாளைக்கு நீங்க சீரியசா எதாச்சும் போஸ்ட் பண்ணினா யாராவது நம்புவாங்களா?

இந்தி சேனல் ஒன்றில் “சுயம்வரம்” என்ற பெயரில் கேம் ஷோ ஒன்று நடத்தினார்கள். அதுபோன்ற ஒரு கேம் ஷோவாகத்தான் இது இருக்கும் என்பது நமது கணிப்பு.

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்று கேம் ஷோ நடத்துவதெல்லாம் ஓகே. ஆனால் அதெற்கென்று, “உங்களில் யார் ஆர்யாவின் அடுத்த கேர்ள் ஃப்ரெண்ட்” என்றெல்லாமா நடத்துவீர்கள்?? ரொம்ப ஓவர் பாஸ்!