full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அசல் கோலாரின் ‘ஹே சிரி’ இண்டி ஹிட் பாடலுடன் திங்க் மியூசிக் மீண்டும் களம் இறங்கியுள்ளது

*அசல் கோலாரின் ‘ஹே சிரி’ இண்டி ஹிட் பாடலுடன் திங்க் மியூசிக் மீண்டும் களம் இறங்கியுள்ளது!*

வசீகரிக்கும் சுயாதீன பாடல்களுடன் இசை ஆர்வலர்களை கவரும் வகையில் திங்க் மியூசிக் பல பாடல்களை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் சமீபத்தில் ரசிகர்களை கவர்ந்த ஒன்று ‘ஹே சிரி’ பாடல். வெளியான ஒரே இரவில் இது ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹே புள்ள’ பாடலின் வெற்றிக்குப் பிறகு, திங்க் மியூசிக் மற்றும் இண்டீ ஆர்ட்டிஸ்ட் கிரண் சுரத்தின் இரண்டாவது கூட்டணியில் ‘ஹே சிரி’ பாடல் உருவாகியுள்ளது.

ஆதித்யா ஆர்.கே (சூப்பர் சிங்கர் & டான் ‘பே’ பாடல் புகழ்) இந்த பாடலை பாடியிருக்க, கிரண் சுரத் இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி வரிகளை எழுதியுள்ளார். இந்தப் பாடலில் நமீதா கிருஷ்ணமூர்த்தி (குலு குலு திரைப்படப் புகழ்) உடன் அசல் கோலார் திரையில் நடித்துள்ளார். அசல் கோலார் மற்றும் திங்க் மியூசிக் ஆகிய இரண்டும் இணைந்து அமக்களம், துரை ஸ்லீப்பிங் மற்றும் வேணாம் பேபி போன்ற ‘அட்டி கல்ச்சர்’ பாடல்கள் மூலம் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றுள்ளன. இவர்களது சமீபத்திய படைப்பான ‘ஹே சிரி’யில் நடிகராக அசல் கோலார் தோன்றுவது இதுவே முதல் முறை.

லியோவின் ‘நான் ரெடி’ பாடலில் ராக்ஸ்டார் அனிருத்துடன் பின்னணிப் பாடகர் அசல் கோலார் இணைந்தது ஸ்பாட்டிஃபையில் அவருக்கு ரசிகர்களை அதிகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு ‘டாடா’ படத்தில் ‘போகாதே’ மியூசிக் வீடியோ மற்றும் ‘ஹே பேபி’ மியூசிக் வீடியோவை திங்க் ஒரிஜினல்களுக்காக இயக்கிய பரதன் குமணன் (எ) பாடி இந்தப் பாடலையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரண் சுரத்தின் இசையமைப்பு, ஆதித்யா ஆர்.கே.யின் அட்டகாசமான குரல்வளம், ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜாவின் காட்சி நேர்த்தி, பிரதீப் ராஜின் வசீகரிக்கும் கலைப்படைப்பு ஆகியவை ‘ஹே சிரி’யின் முதல் பார்வையில் இருந்தே பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இது இப்போது அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட இசையாக அனைவரது பிளேலிஸ்ட்களிலும் உள்ளது.

*தொழில்நுட்ப குழு*

இயக்குநர்: பரதன் குமணன்,
ஒளிப்பதிவு: அர்ஜுன்ராஜா,
கலை: பிரதீப் ராஜ்,
எடிட்: ஃபென்னி ஆலிவர்,
VFX: முகமது அக்ரம்,
DI கலரிஸ்ட்: சிவா,
நடன இயக்குநர்: சபரீஷ் ராமச்சந்திரன், ஜோயல் ராஜ்,
ஆடை வடிவமைப்பாளர்: மதுரா மணியன்,
ஒப்பனை: ஆதி,
illustrated by தினகர் ராஜா, போஸ்டர்: Pada Cassette, பரணிதரன் நடராஜன்,
ஸ்டில்ஸ்: தி மெட்ராஸ் டச்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: மோகன் பி,
தயாரிப்பு மேலாளர்: தீபக், பிரவீன்,
டைரக்ஷன் டீம்: ஜெரோம் ரெமிஜியாஸ், ஜெகநாதன் தங்கம், ஆகாஷ் ஹரிஹரன், சந்துரு,
உதவி நடன இயக்குநர்; ஆம்ப்ரோஸ்,
ஆடை வடிவமைப்பாளர் குழு: அஷ்வின் வெங்கட், ப்ரீத்தி நரேஷ், காவ்யா.