full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நிவின் பாலி இடத்தை பிடித்த அசோக் செல்வன்

அசோக் செல்வன் நடிப்பில் தற்போது உருவாக்கி இருக்கும் படம் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். ட்ரிம் வாரியர்ஸ் பிட்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் அசோக் செல்வன், நடிகை பிரியா ஆனந்த், இசையமைப்பாளர் நிவாஸ், இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதில் இயக்குனர் ஞானவேல் பேசும்போது, ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படம் ஒரு மிடில் பென்ஞ் மாணவனின் கதை. நிறைய பேருக்கு இப்படம் பார்க்கும் போது, பல நினைவுகள் வந்து போகும். இப்படத்தின் கதையை முதலில் நிவின் பாலியிடம் சொன்னேன். இவர் தான் இப்படத்தின் கதைக்கு பொருத்தமாக இருந்தார். ஆனால், சில காரணங்களால், நிவின் பாலியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. பின்னர், சிறந்த நடிகருகாக காத்திருந்தேன். அப்போது, இசையமைப்பாளர் நிவாஸ் மூலமாக நடிகர் அசோக் செல்வன் என்னிடம் தொடர்பு கொண்டார். நானும் அவரிடம் கதையை சொன்னேன். பின்னர் இக்கதைக்கு பொருத்தமாக இருப்பாரா என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். ஒருநாள் மேக்கப் டெஸ்ட் எடுத்து பார்த்தேன். அதன்பின்பு தான் என்னுடைய கதைக்கு அசோக் செல்வன் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தேன்.

இப்படத்திற்காக சிறந்த டெக்னிஷன்கள் கிடைத்தது. எல்லோரும் சிறப்பாக வேலை பார்த்திருக்கிறார்கள். எடிட்டர் லியோனின் வெற்றிப்பட வரிசையில் இப்படம் கண்டிப்பாக இருக்கும். இசையமைப்பாளர் நிவாஸ் இசையில் வெளியான ‘தெகிடி’, ‘சேதுபதி’, ‘ஜீரோ’ ஆகிய வெற்றி படங்களில் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படமும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக இப்படத்தின் பின்னணி அதிகம் பேசப்படும். கிளாஸ்ல டாப்பரான ஒரு பொண்ணு தேடினேன். அப்போ என் மனதிற்கு தோன்றிய பொண்ணுதான் பிரியா ஆனந்த். கதை சொன்னவுடன் நடிக்க சம்மதித்தார். சிறந்த குழு அமைவதற்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு மிகப்பெரிய நன்றி. வரும் 28ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. நிச்சயம் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும்’ என்றார்.