குடும்ப தலைவரான தனுஷிற்கும் மஞ்சு வாரியாருக்கும் முருகன் ( டிஜே), சிதம்பரம் (கென்) மற்றும் ஒரு பெண் என மூன்று குழந்தைகள் உள்ளன.
ஆடுகளம் நரேன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து ஊரில் உள்ளவர்களின் நிலங்களையெல்லாம் விலைக்கு வாங்கி சிமெண்ட் பேக்டரி கட்ட திட்டம் போடுகின்றனர். ஆனால் தனுஷ் குடும்பம் அதற்கு சம்மதிக்காததால் இரண்டு குடும்பத்திற்கும் தகராறு ஏற்படுகிறது.
இந்த தகராறால் தனுஷின் மூத்த மகன் முருகனை கொன்று விடுகின்றனர். இதனால் தனுஷின் இரண்டாம் மகன் கென் ஆடுகளம் நரேனை கொன்று விடுகிறார். அதன் பிறகு நரேனின் குடும்பம் தனுஷையும் கென்னையும் பழி வாங்க திட்டமிடுகின்றனர்.
இவர்களிடம் இருந்து தனுஷின் குடும்பம் எப்படி தப்பிக்கிறது? இறுதியில் என்னவானது என்பது தான் இப்படத்தின் மீதி கதை.
இராண்டாம் பாதியில் தனுஷின் ரசிகர்களின் எதிர்ப்பாப்பை நிறைவேற்றியுள்ளனர்.
அம்மு அபிராமியின் இயல்பான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.டி.ஜே முதல் படமாக இருந்தாலும் நடிப்பில் வெலுத்துள்ளார். கென் நகைச்சுவை குறைவாக கொடுத்தாலும் முழு திறமையையும் நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி என படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். படத்தில் நடித்துள்ள அனைவருக்குமே சிறந்த நடிகர் நடிகர்களுக்காக விருது கொடுக்கலாம்.
ஜி. வி பிரகாஷின் இசை படத்திற்கு மிக பெரிய பலம். இடத்திற்கு தகுந்தாற் போல இசையை மாற்றி முழு படத்திற்கும் உயிர் கொடுத்துள்ளார். வேல்ராஜின் ஒளிப்பதிவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொரு காட்சியையும் மிகவும் தெளிவாக படம் பிடித்துள்ளார். ஆர். ராமரின் எடிட்டிங் படத்தை மேலும் மெருகேற்றியுள்ளது.
வெற்றிமாறனின் திரைக்கதை மிக சிறப்பு.. படத்தின் கதையை இரண்டு விதமாக பிரித்து காண்பித்தது சிறப்பு. ஆக்ஷன், எமோஷன், செண்டிமெண்ட் என அனைத்தையும் சேர்த்து அற்புதமாக கொடுத்துள்ளார். ஒவ்வொருவரிடம் இருந்தும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்த வைத்துள்ளார்.
முதல் பாதியில் மட்டும் கொஞ்சம் திரைக்கதை வேகத்தை கூட்டி இருக்கலாம்.
மொத்தில் அசுரவேட்டை ஆரம்பம்