அசுரவதம் படத்தைக் கைப்பற்றிய தொலைக்காட்சி

News

`கொடிவீரன்’ படத்தைத் தொடர்ந்து சசிகுமார் ‘அசுரவதம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மருது பாண்டியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் டீசரும் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படஅதிபர்கள் போராட்டம் நடத்தியதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

போராட்டம் முடிந்து படங்கள் ரிலீசாகி வருவதால், புதிய ரிலீஸ் தேதி குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சசிகுமார் தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் `நாடோடிகள்-2′ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். அதுல்யா, பரணி, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.