full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மீண்டும் போதையில் அதர்வா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் கெளதம் மேனன் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார். அதேபோல் ஒண்ராகா ஒரிஜினல்ஸ் மூலம் பாடல் ஆல்பங்களை தயாரித்து வருகிறார்.

ஏற்கனவே ஒண்ராகா ஒரிஜினல்ஸ் வெளியிட்ட `கூவா’, `உளவிறவு’ உள்ளிட்ட ஆல்பங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் `உளவிறவு’ பாடலில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ், தொலைக்காட்சி பிரபலம் திவ்யதர்ஷினி ரொமான்ஸ் செய்யும்படியாக அந்த பாடல் உருவாகி இருந்தது.

இந்த நிலையில், ஒண்ராகா ஒரிஜினல்ஸின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. `போதை கோதை’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த பாடலில் அதர்வா – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கின்றனர். மதன் கார்க்கி எழுதியிருக்கும் இந்த பாடலுக்கு கார்த்திக் இசையமைத்திருக்கிறார். இந்த பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.