அடுத்தடுத்த முன்று முரடு ஹிட் படங்களைக் கொடுத்து கோலிவுட்டை அலற விட்டவர் இயக்குநர் அட்லி. மூன்றில் இரண்டு விஜய் படங்கள் வேறு. சொல்லவா வேண்டும்?
எப்படியாவது ரஜினியிடம் கதை சொல்லி ஒகே வாங்கி விட வேண்டுமென பிரயத்தனம் எடுத்து வந்தவ்ருக்கு, கார்த்திக் சுப்புராஜ் தான் ரஜினியின் அடுத்த இயக்குநர் என தெரிந்த்ததும் நொறுங்கிப் போயிருக்கிறார் இப்போது.
ஏற்கனவே விஜய், முருகதாஸ் படத்தில் நடிக்கப் போனதையே எதிர்பார்க்காதவருக்கு ரஜினியின் இந்த முடிவு மேலும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.
இதையடுத்து தெலுங்கு தேசத்தில் இருக்கும் பெரிய ஹீரோவை அணுகியிருக்கிறார் இயக்குனர் அட்லி. அவரும் கைவிரித்து விட, இதனால் தன்னுடைய அடுத்த படத்தை மாஸ் ஹீரோ இல்லாமல் எடுக்கும் முடிவில் இருப்பதாக தெரிகிறது. இல்லையேல், அட்லியின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் நடிக்கக் கூடும் என கூறப்படுகிறது.