full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அட்லீயின் சர்ப்ரைஸ் வாழ்த்து – “நரை” படக்குழுவினர் உற்சாகம்!!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, “ஜூனியர்” பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “நரை”.

அறிமுக இயக்குநர் விவி இயக்கியுள்ள இப்படம், வழக்கமாக இளம் கதாநாயகர்கள் வில்லன்களிடம் மோதுவதையே பார்த்துப் பழகிப்போன தமிழ் ரசிகர்களுக்கு, வயதான முதியவர்கள் வில்லன்களிடம் மோதுவது மாதிரியான கதையம்சத்துடன் படமாக்கப் பட்டுள்ளது.

நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக ‘அம்மா கிரியேசன்ஸ்’ சிவா மற்றும் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர் கே சுரேஷ் கலந்து கொண்டு டீசரை வெளியிட்டனர்.

முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லீ கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனது அடுத்த பட வேலைகளில் அட்லீ பிஸியானதால் அது உறுதி செய்யப்படவில்லை. என்றாலும், “நரை” படத்தின் டீசர் லிங்கை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து படக்குழுவினருக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்.

இதனால் “நரை” படக்குழுவினர் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

Narai Movie Teaser : https://www.youtube.com/watch?v=q0RSQNFkKxc