மின்மினியாக விஷ்ணு விஷால், அமலாபால்

விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் `மாவீரன் கிட்டு’. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது விஷ்ணு, `கதாநாயகன்’, `சின்ட்ரல்லா’, `பொன் ஒன்று கண்டேன்’, `சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், `முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் விரைவில் நடிக்க உள்ளார். இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் முதல் முறையாக நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு `மின்மினி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Continue Reading

மோகன் ராஜாவின் அடுத்த திட்டம்?

    சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா முதல்முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக இப்படத்தில் நடித்து வருகிறார். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜுன் 5-ஆம் […]

Continue Reading

சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படமும்

தனுஷ் இயக்கத்தில் `ப பாண்டி’ (பவர்பாண்டி) படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மே மாதம் ரிலீசாகவிருப்பதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் `வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாவது பாகத்திலும் தனுஷ் நடித்து முடித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை’ படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். பின்னர் ‘மாரி-2’ படத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பங்கேற்க உள்ளதாகவும், கார்த்திக் […]

Continue Reading

இரட்டை இலையைக் கைப்பற்ற லஞ்சம், டிடிவி தினகரன் கைது

அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக இரு அணியினரும் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் அவர் லஞ்சம் […]

Continue Reading