சம்திங் ஸ்பெஷலுடன் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ டீசர் வெளியீடு!

V.C.R.பிலிம்ஸ் சார்பாக P.ராமாராவ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பிளஸ் or மைனஸ்’. இந்தப்படத்தில் அபி சரவணன், உமய் கதாநாயகர்களாகவும் அக்சரா, அக்‌ஷிதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் நிழல்கள் ரவி, ஸ்ரீரஞ்சனி, ப்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை ‘ஜெய் சுப்பிரமணி யசோதா’ இயக்கியுள்ளார். ஜெய் கிரிஷ் என்பவர் இசையமைக்க, சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்படம் அழகான காதல் கதையாக உருவாகியுள்ளது. படம் நன்றாக வந்திருப்பதில் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். அந்த உற்சாகத்துடன் இந்தப்படத்தின் டீசரை வரும் […]

Continue Reading

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி

சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் அங்கு மத்திய ரிசர்வ் படையினர் முகாமிட்டு நக்சலைட்டுகளை ஒடுக்கி வருகின்றனர். கலபதர் என்ற வனப்பகுதியில், ரிசர்வ் படையினர் அங்குள்ள மோசமான சாலையை சீரமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த நக்சலைட்டுகள், ரிசர்வ் படையினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் ரிசர்வ் படையினர் நிலைகுலைந்தனர். இச்சம்பவத்தில் ரிசர்வ் படையினர் 25 பேர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக […]

Continue Reading

முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி : மு.க.ஸ்டாலின்

விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பஸ் மறியலில் ஈடுபட்டார். இன்று காலை 9.15 மணியளவில் திருவாரூர் சன்னதி தெருவில் இருந்து பேரணியாக புதிய பஸ் நிலையத்திற்கு நடந்தே சென்றார். அவருடன் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர். பாலு, மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் பொய்யாமொழி, மதிவாணன் உள்ளிட்டோரும் சென்றனர். புதிய பஸ் நிலையம் அருகில் மு.க.ஸ்டாலின் மறியலில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க. […]

Continue Reading

உயரிய விருது பெற்ற கே.விஸ்வநாத்

இந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய சினிமவின் தந்தை என்றழைக்கப்படும் மறைந்த இயக்குநர் தாதாசாகேப் பால்கே பெயரால் ஆண்டு தோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2016 ஆண்டுக்கான ‘தாதாசாகேப் பால்கே’ விருது மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான கே.விஸ்வநாத்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 3-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருதை ஜனாதிபதி வழங்க இருக்கிறார். இந்த விருதுடன் 10 […]

Continue Reading

தேசிய விருதை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்: நடிகர் ஆவேசம்

இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் ‘ருஸ்டம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைத் தட்டிச்சென்றார். அவர் தேசிய விருது பெறுவது இதுவே முதல் முறை. இந்த நிலையில், அக்‌ஷய் குமாருக்கு தேசிய விருது அளித்தது சரியல்ல என்று பரபரப்பான விவாதம் எழுந்தது. இதுபற்றி மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகர் அக்‌ஷய் குமார், “ஒருவர் தேசிய விருதை பெறும்போது அவரை சுற்றிலும் விவாதம் நடப்பதை கடந்த 25 ஆண்டுகளாக […]

Continue Reading

மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்றில் பிரியங்கா சோப்ரா

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா. கொலம்பியா விண்கலத்தில் 7 பேர் கொண்ட குழுவுடன் விண்வெளிக்கு பயணித்த கல்பனா சாவ்லா அங்கு 31 நாட்கள், 14 மணிநேரம், 54 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். பின்னர் தனது ஆராய்ச்சிகளை முடித்த பின்னர் விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, விண்கலம் வெடித்துச் சிதறியதில் கடந்த 2003ம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை பாலிவுட் இயக்குநர் பிரியா மிஷ்ரா படமாக எடுக்க முடிவு […]

Continue Reading