சுஜா வரூணியின் துணிச்சல் ஸ்டேட்மெண்ட்!!

‘மிஜா’, ‘கிடாரி’, ‘குற்றம் 23’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் சுஜாவரூணி. “எனக்கு வாய்ப்பளிப்பதற்காக, என்னைத் தேடி வரும் இயக்குனரிடம் முதலில் நான் திறந்த மனதுடன், கதையை கேட்கிறேன். ஒரு காட்சியில் வந்தாலும் ‘நச்’ சென்று ரசிகர்களின் மனதில் நிற்க வேண்டும். அதிக சம்பளம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. இயக்குநர்கள் பாலா, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் போன்ற இயக்குனர்கள் இயக்கும் படங்களில் சிறிய கேரக்டர்களில் நடிப்பதற்கு விரும்புகிறேன். […]

Continue Reading

கமல், ரஜினி படத் தலைப்புகளில் சிபிராஜ்

‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் புதிய படத்திற்கு கமல் நடிப்பில் 90-களில் வெளிவந்த ‘சத்யா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து சிபிராஜ் அடுத்தாக நடிக்கவிருக்கும் படத்திற்கு ரஜினி படத்தலைப்பான ‘ரங்கா’ என்ற பெயரை வைத்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் என்பவர் இயக்குகிறார். சிபிராஜுக்கு ஜோடியாக ‘கிடாரி’, ‘வெற்றிவேல்’ ஆகிய படங்களில் நடித்த நிகிலா விமல் நடிக்கிறார். ராம்ஜீவன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆனந்த் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு […]

Continue Reading

விருது கிடைத்த திருப்தியில் ரம்யா பாண்டியன்

தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் ராஜு முருகன் இயக்கத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அடுத்து தாமிரா இயக்கும் ஒரு படத்தில் சமுத்திரகனி ஜோடியாக நடித்திருக்கிறார். இதுபற்றி ரம்யாபாண்டியனிடம் கேட்ட போது… `ஜோக்கர்’ படத்தை விட இதில் வித்தியாசமான வேடம். முதல் படத்தில் அதிகமாக பேசவில்லை. இதில் நிறைய வசனம் பேசி நடித்திருக்கிறேன். இந்த படத்தில் என்னை வித்தியாசமான கோணத்தில் பார்க்கலாம். ‘ஜோக்கர்’ படத்தை போலவே இப்படத்திலும் எனக்கு நானே டப்பிங் பேசுகிறேன். இந்த படத்தில் […]

Continue Reading

அவதாரின் அடுத்த அவதாரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் பிரம்மாண்ட வசூலைக் குவித்த படம் ‘அவதார்’. இப்படம் 2.8 பில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்தது. மேலும் `டைட்டானிக்’ படத்தின் வசூல் சாதனையையும் ‘அவதார்’ முறியடித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ‘அவதார்’ படத்தின் மேலும் 4 பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். அதன்படி `அவதார் 2′ 2014-ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை அப்படம் வெளிவரவில்லை. இதுகுறித்து கடந்த […]

Continue Reading

துல்கருடன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தன்ஷிகா

தமிழில் விக்ரம் – ஜுவா கூட்டணியில் `டேவிட்’ என்ற படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் இந்தியில் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் `சோலோ’ என்ற படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இயக்கி வருகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான் – ஆர்த்தி வெங்கடேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான சாய் தன்ஷிகா இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். ஸ்ருதி […]

Continue Reading

பேசும்படியான பேசாத கதாபாத்திரம்!!

காடு மற்றும் காட்டு மனிதர்களை பின்னணியாக வைத்து, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் புதிய படம் ‘வனமகன்’. இப்படத்தில் ஜெயம் ரவி காட்டில் வசிக்கும் இளைஞராக நடித்துள்ளார். சாயிஷா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு வசனங்களே இல்லாமல், முழுக்க முழுக்க சைகையிலேயே பேசி நடித்திருக்கிறாராம். அவர் இதுவரை நடித்த படங்களில் இந்த படத்தின் கதாபாத்திரம் பேசும்படியாக இருக்கும் […]

Continue Reading

நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு உதவிய பிரசன்னா மற்றும் சினேகா !!!

தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கடந்த மாதம் டெல்லிக்கு சென்றிருந்தார் என்பது நாம் அறிந்த ஒன்று. பெருமைமிகு தமிழர்கள் விழாவில் நடிகர் விஷால் நலிந்த விவசாயிகள் 10பேருக்கு உதவினார் அவர் செய்த நற்பணியை பார்த்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆவலோடு இருந்த நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகாவுக்கு நலிந்த விவசாயிகளின் பட்டியலை வழங்கி அவர்களுக்கு உதவுமாறு கூறி அவர்களுக்கு தகவலளித்தார். அதன்படி […]

Continue Reading