நவம்பரில் மிரட்ட வருகிறாள் ”அவள்”!

News

சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் மிலிண்ட் ராவ் இயக்கியிருக்கும் படம் “அவள்”. ‘வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘ஏடாகி என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

டிரைலர் வெளியான நாளிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படம் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள்.

”விக்ரம் வேதா” படத்தை தொடர்ந்து ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் ”அவள்” படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது. இது குறித்து ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் பேசுகையில்,

”அவள்” திரைப்படம் சினிமா ரசிகர்களை நிச்சயம் திகிலில் உறைய வைக்கும். உண்மையாகவே பயமுறுத்தி நடுங்கவைக்கும் படம் இது. ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு இணையாக ‘அவள்’ உள்ளது என உறுதியாக கூறலாம். பல விதமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் துணிச்சலாக ஏற்று நடித்து ஜொலிப்பவர் நடிகர் சித்தார்த், அதேபோல் தான் ஆண்ட்ரியாவும்.. இவர்களின் நடிப்பில் கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களை மிரட்டும்” என்றார்.

மேலும், இப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து நடிகர் சித்தார்த்தும் எழுதியுள்ளதும், நடிகர் அதுல் குல்கர்னி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.