full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அவதாரின் அடுத்த அவதாரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் பிரம்மாண்ட வசூலைக் குவித்த படம் ‘அவதார்’. இப்படம் 2.8 பில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்தது. மேலும் `டைட்டானிக்’ படத்தின் வசூல் சாதனையையும் ‘அவதார்’ முறியடித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து ‘அவதார்’ படத்தின் மேலும் 4 பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். அதன்படி `அவதார் 2′ 2014-ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை அப்படம் வெளிவரவில்லை. இதுகுறித்து கடந்த மாதம் பேட்டியளித்த ஜேம்ஸ் கேமரூன் `அவதார் 2′ இந்த வருடம் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், `அவதார்’ படத்தின் அடுத்த 4 பாகங்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வரிசையாக வெளியாக உள்ள அவதார் படத்தின் ரிலீஸ் தேதிகளாவன,

`அவதார் 2′ – டிசம்பர் 18 2020
`அவதார் 3′ – டிசம்பர் 17 2021
`அவதார் 4′ – டிசம்பர் 20 2024
`அவதார் 5′ – டிசம்பர் 19 2025

ஆகிய தேதிகளில் வரிசையாக வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.