full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்

காமிக்ஸ் ரசிகர்கள் வெகு ஆண்டுகளாக பார்க்க காத்திருக்கும் படம் ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’. அப்படி என்னதான் இந்த திரைப்படத்தில் இருந்துவிட முடியும். இதுவும் ஒரு சூப்பர் ஹீரோ படம்தானே என்று இந்த திரைப்படத்தை ஒதுக்கிவிட முடியாது.

வழக்கமான சூப்பர் ஹீரோ கதைகளில் , வித்தியாசமான சக்தி கொண்ட சூப்பர் ஹீரோ வில்லனை கொன்றுவிடுவார். ஆனால் இந்தப் படத்தில் ஒவ்வொரு நபரும் சூப்பர் ஹிரோக்கள். சினிமா வரலாற்றில் இதுபோன்ற வித்தியாசமான சூப்பர் ஹீரோ கதை இதுவரை வெளியானது கிடையாது. படத்தின் போஸ்டர் முதல், டிரைய்லர் வரை ரசிகர்களின் ஆர்வத்தை வெகுவாக உயர்த்தி உள்ளது.

படத்தின் கதை பற்றி ஒரு பார்வை:

தேனோஸ் எனும் ஒரு அரக்கன் உலகை மொத்தமாக அழிக்கத் திட்டம் தீட்டுகிறான். எல்லா சூப்பர் ஹீரோக்கள் இணைந்து அதை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதுதான், ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ படத்தின் கதை.

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்

ஒரு சூப்பர் ஹீரோ என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. படத்தில் அனைவருமே சூப்பர் ஹீரோக்கள் என்றால் எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள். விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது.

ஆனால் ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாரி’ல் வரும் கதாபாத்திரங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முன் வெளியான 18 படங்களில் ஒன்றையாவது பார்த்திருக்க வேண்டும் . என்னடா இப்படி சொல்லிடாங்களேன்னு கவலைப்படாதீங்க. பின் வரும் சுருக்கமான விவரங்களை நீங்கள் படித்தாலே படத்தைப் பார்க்கலாம் .

மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸின் 19 வது படம்தான் ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’. காமிக்ஸ் குறும்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பல தரப்பட்ட தொடர்கள் மூலம்தான் அவெஞ்சர்ஸ் தொடர்களுக்கான தொடர்புகளை விரிவுபடுத்த முடிந்தது.

மார்வெல் நிறுவனம் காமிக்ஸோடு நிறுத்திக் கொள்ளாமல், படமும் எடுக்கலாம் என்ற முடிவை எடுக்கிறது. ஆனால் இவர்கள் மற்ற சினிமா நிறுவனங்களைப் போல அல்லாமல் கிராஸ் ஓவர் சினிமாக்களை எடுத்தார்கள் . உதாரணத்திற்கு அவெஞ்சர்ஸ், டிசியின் ‘ஜஸ்டிஸ் லீக்’ போன்ற படங்களை இந்த நிறுவனம் வெளியிட்டது.

நான்கைந்து தொடர்களில் வரும் கதாபாத்திரங்களை ஒரே படத்தில் இணைப்பது என்பது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. எல்லாப் படங்களுக்கும் ஒவ்வொரு காலநிலை மாற்றம் உண்டு. அதுபோல அந்த கதாபாத்திரங்களுக்கும் காலநிலைக்கும் தொடர்பு இருக்கும் .

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் பல சூப்பர் ஹீரோக்களை ஒரு படத்தில் வைத்து கதை அமைப்பது, அதை காட்சிப்படுத்துவதும் அவ்வளவு எளிதல்ல .

முதலில் இந்த மாதம் வெளியாகும் படத்திற்கு ’அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ பாகம் 1 மற்றும் இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு வெளியாகும் படத்திற்கு ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ பாகம் 2 என்றுதான் பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் தற்போது ’அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ என்று மட்டுமே பெயர் வைத்திருக்கிறார்கள்.

எனவே’அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ படத்தை பார்ப்பதற்கு முன்பு பின்வரும் திரைப்படங்களை மறக்காமல் பாருங்கள். அயர்ன் மேன் (2008), தி இன்கிரெடிபிள் ஹல்க், அயர்ன் மேன் 2 , தோர் ,கேப்டன் அமெரிக்கா : தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர் , மார்வெல்ஸ் : தி அவெஞ்சர்ஸ்