ஆயிரம் பொற்காசுகள் திரைவிமர்சனம்
தயாரிப்பாளர் விநியோகிஸ்தர் கேயார் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் வினியிகிஸ்தராக அவதாரம் எடுக்கும் படம் தான் இந்த ஆயிரம் பொற்காசுகள். இந்த படத்தை அவர் நீண்ட நாடுகளுக்கு பின் வெளியிடும் ரகசியம் என்ன தெரியுமா?
படத்தின் கதைக்களம் படத்தின் தரம் தான் உங்களுக்கு என்னதான் கவலை இருந்தாலும் பிரச்சனைகள் இருந்தாலும் இந்த படம் பார்க்கும் இரண்டு மணி நேரம் உங்களை மறக்க செய்யும் அந்த அளவுக்கு ஒரு நகைசுவை படம் என்று சொன்னால் மிகையாகாது.
விதார்த் சரவணன் ஹலோ கந்தசாமி ஜார்ஜ் மரியன் இவர்களின் கலாட்டா நம்மை அப்படி ரசிக்க வைக்கும்.
அறிமுக இயக்குனர் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், அருந்ததி, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த ஆயிரம் பொற்காசுகள்.
படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜோகன், ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பானு முருகன்.
தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தில், வாழ்ந்து வருகிறார் சரவணன்., திருமணம் முடிக்காமல் சோம்பேறித்தனமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவரோடு வந்து சேர்கிறார் சரவணனி தங்கை மகனான விதார்த்.
கிராமம் முழுவதும் டாய்லெட் கட்ட சொல்லி அரசாங்கம் சொல்ல, அதற்காக மானியம் கிடைக்கும் என்பதால் சரவணனும் டாய்லெட் கட்டுவதற்கு குழி தோண்டுகிறார். குழி தோண்டா ஜார்ஜ் வருகிறார்.
ஜார்ஜ் குழி தோண்டும்போது அங்கு ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய ஒரு பானை கிடைக்கிறது. அதை, விதார்த், சரவணனோடு சேர்ந்து பங்கு போட நினைக்கிறார் ஜார்ஜ்.
பங்கு பிரிக்கப்பட்டதா.? யாருக்கெல்லாம் பொற்காசுகள் கிடைத்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
விதார்த், சரவணனும் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை செய்திருக்கிறார்கள். படத்தின் பலம் என்றால் அது ஜார்ஜும் ஹலோ கந்தசாமியும் தான். தங்களால் முடிந்த வரை காட்சிகளுக்கு உயிர் கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட காமெடியை சிதறவிட்டுச் சென்றிருக்கிறது. முதல் பாதி கதைக்களத்தை செல்ல, இரண்டாம் பாதி சும்மா விறு விறுன்னு வேகமெடுக்கிறது ரசிக்க வைக்கிறது.
சின்னதொரு கதை என்றாலும் அதை திரைக்கதையில் ரசனையாக்கி படைத்திருக்கிறார் இயக்குனர்.
அறிமுக இயக்குனர் ரவி முருகையா முதல் படத்திலே முத்திரை பதித்துள்ளார் காட்சிக்கு காட்சி நம்மை ரசிக்க வைக்கிறார் குறிப்பாக படத்தின் திரைக்கதை நகைசுவை வசங்களும் காட்சிகளும் நம்மை குலுங்க குலுங்க ரசிக்க வைக்கிறது குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் நம்மை மிகவும் ரசிக்க வைக்கிறது.புதையலை தேடும்போதும் ஒவ்வொருவர் கைமாறும் போதும் நம்மை ரசிக்க வைக்கும் காட்சிகளாக அமைத்து இருக்கிறார் இயக்குனர்
படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். இறுதி வரை சிரிப்பலையில் திரையரங்கமே அதிர வைத்துவிட்டார்கள் படக்குழுவினர். இந்த வருடத்தின் காமெடி படங்களில் சிறந்த படமாக இப்படம் நிச்சயம் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
குடும்பத்தோடு ஒருமுறை நிச்சயம் விசிட் அடிக்கலாம்…
ஆயிரம் பொற்காசுகள் – காமெடி சரவெடி