ஹோம்பாலே ஃபிலிம்ஸ்- ‘பஹீரா’ படத்தின் டீசரை.. அப்படத்தின் நாயகனான ஸ்ரீ முரளியின் பிறந்த நாளில் வெளியிடுகிறது

cinema news Teasers

ஹோம்பாலே ஃபிலிம்ஸ்- ‘பஹீரா’ படத்தின் டீசரை.. அப்படத்தின் நாயகனான ஸ்ரீ முரளியின் பிறந்த நாளில் வெளியிடுகிறது

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் – ‘கே ஜி எஃப்’ சீரிஸ், ‘காந்தாரா’ மற்றும் ‘சலார்’ போன்ற பிரம்மாண்டமான சினிமா அனுபவங்களை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனத்தின் அண்மைய தயாரிப்பான ‘பஹீரா’ படத்தின் டீசரை பெருமையுடன் வழங்குகிறது.‌ ‘டைனமிக் ரோரிங் ஸ்டார்’ ஸ்ரீ முரளி நடித்திருக்கும் இப்படத்தின் டீசரை.. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் டீசர் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.

இந்த திரைப்படத்தை புகழ்பெற்ற இயக்குநர் சூரி இயக்கியிருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் திறமையான நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கியமான வேடத்தில் நடித்திருக்க, ‘எஸ். எஸ். இ’ புகழ் ருக்மணி வசந்த் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு அஜ்னீஷ் இசையமைத்திருக்கிறார். அவரது இசை கோர்வை – கதை களத்திற்கு ஏற்ப நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் காட்சிக்கு கூடுதல் ஆழத்தை வழங்கும் என உறுதியளிக்கிறது.

2024 ஆம் ஆண்டில் இந்த ‘பஹீரா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ‘பஹீரா’ திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தயாராகியிருக்கிறது. ஹோம்பாலே ஃபிலிம்ஸின் படைப்புகளுக்கு இணையான கதை சொல்லும் திறமை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை இத்திரைப்படம் கொண்டிருக்கிறது. தொலைநோக்கு சிந்தனை உடைய படைப்பாளியான விஜய் கிரகந்தூர் இப்படத்தினை தயாரித்துள்ளார். ‘பஹீரா’ நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களில் ஒரு அழிக்க இயலாத அடையாளத்தை ஏற்படுத்தவுள்ளது.

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனலில் பஹீரா படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. நடிகர் ஸ்ரீ முரளியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் இந்த டீசர்.. 2024 ஆம் ஆண்டில் வெளியாகவிருக்கும் முக்கியமான சினிமா அனுபவமாகவும் திகழும்.‌