எனக்கு 22 வயது, தாய், ஆசிரியராக நடிப்பது சவாலாக இருக்கிறது – பைரவா அபர்ணா வினோத்

News
நாடக மேடை கலைஞர்கள் எப்போதுமே திரைப்படத் துறைக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறார்கள். இந்த நடிகர்கள் வழக்கமான நடிகர்களை தாண்டும் வகையில், மிக நேர்த்தியான நடிப்பை வழங்குவார்கள். அபர்ணா வினோத் 2 படங்கள் மட்டுமே நடித்த, கடவுளின் சொந்த தேசத்திலிருந்து வந்த  நடிகையாக இருக்கலாம், ஆனால் மிகச்சிறந்த நடிப்பு அவரை தமிழ் சினிமாவின் கண்களுக்கு காட்டின. ஆரம்பத்தில், விஜய்யின் பைரவாவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது பரத்தின்  பெயரிடப்படாத புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
 
“நாடக கலைஞராக இருப்பதால், அது என் நடிப்பிற்கான சில துல்லியமான மாற்றங்களை பெற உதவியது. அது தான் ‘ஞான் நின்னோடு’, ‘கோஹினூர்’ போன்ற படங்களின் மூலம் எனக்கு நல்ல மைலேஜ் பெற உதவியது என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் விஜயின் பைரவாவில் மருத்துவ கல்லூரி மாணவியாக நடித்த 22 வயதான அபர்ணா வினோத்.  
 
 
பரத் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க  எவ்வாறு தேர்வானார் என்று அவரே விவரிக்கும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் எனது இரண்டு மலையாள திரைப்படங்களையும் பார்த்து, இந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியான நீதியைச் செய்வேன் என்று உணர்ந்தனர். இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நான் நம்புகிறேன். எனக்கு 22 வயது. தாய், ஆசிரியராக நடிப்பது மிக சவாலானது. இது என்னுடைய ஜோனுக்கு அப்பால் இருக்கிறது. ஆனால் என் கதாபாத்திரம் கேட்கும் விஷயங்களை வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன்” என்கிறார்.
 
கடவுளுடைய சொந்த தேசத்தில் அவரது சக நடிகர் எவ்வாறு போற்றப்படுகிறார் என்பதை அவரே விசேஷமாக விவரிக்கவும்  தவறவில்லை. “அவரது ‘4 தி பீப்புள்’  வெற்றி பெற்றதிலிருந்தே, அவர் அங்கு மிகவும் பிரபலமான நடிகர். கண்டேன் காதலை படத்தில் அவரது நடிப்பை நான் பார்த்திருந்தேன், அவர் காட்சிகளுக்கு தேவையான மிகவும் யதார்த்தமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருந்தார்.
 
சீட்டின் நுனிக்கு வர வைக்கும் பெயரிடப்படாத இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் மூலம் நடிகர் ஷரண் (இனிது இனிது மற்றும் சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா) இயக்குனராக  அறிமுகமாகிறார். தரண் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் கொடைக்கானலில் துவங்க இருக்கிறது.