பேய்க்கதையாக இருந்தாலும் எடுத்துக்கொண்ட கருவிற்காக மனமுவந்து பாராட்டலாம் இயக்குநர் சினிஷை. அந்த ஒரு காரணம் மட்டுமே படத்தை மற்ற பேய்ப்படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தியிருக்கிறது.
சாதியை மூலதனமாக்கி அரசியல் செய்யும் ஒரு போலி அரசியல்வதியினால் நிகழ்த்தப்படும் ஆணவக் கொலையினைப் பிந்தொடர்ந்து நட்க்கிற விஷயங்களை கற்பனை கலந்து அமானுஷ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். இங்கு இன்னும் பல அரசியல்வாதிகள் இந்தப் படத்தில் வருகிற வில்லன்களாகத்தான் இருக்கிறார்கள். அதே போல் இந்த மண்ணில் ஆணவப் படுகொளை செய்யப்பட்ட காதல் ஜோடிகள் எல்லாம் ஆவியாக வந்தால் ஒரு சாதிச் சங்கத் தலைவன் கூட உயிரோடு இருக்க மாட்டான்.
உண்மையிலேயே பாராட்டுக்குரியவர் இயக்குநர் சினிஷ். காரணம், படத்தின் ஆரம்பத்தில் ஆங்கிலப் படங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகட்டும், நடிகையின் பெயரின் பின்னாலிருந்து சாதியை தூக்கிவிட்டு “ஜனனி” என்று மட்டும் பயன்படுத்திய்தாகட்டும், டைட்டில் கார்டில் தன் பெயருக்குப் பின்னால் இசையமைப்பாளர் யுவன் பெயரை பயன்படுத்தியதாகட்டும் வரிசையாக நிறைய முன்னுதாரணங்கள். சூப்பர் ப்ரோ.. கீப் இட் அப்!!
முதல் பாதி முழுக்க அலப்பறையை கொடுத்திருப்பது யோகிபாபு – கார்த்திக் கூட்டணி தான். இருவரின் சேட்டைகள் தான் படத்தை தொய்வில்லாமல் நகர்த்தியிருக்கிறது. காரணம் திகில் காட்சிகள் பல இடங்களில் பயமுறுத்தாமல் ஜஸ்ட் லைக் தட் கடந்து போகிறது.
ஜெய் வழக்கமான அதே நடிப்பு. பிற்பாதியில் சில முயர்சிகள் எடுபடவில்லை. அஞ்சலி, ஜனனி இருவரில் அஞ்சலி ஸ்கோர் செய்வதற்கான நிறைய வாய்ப்புகளி இயக்குநர் வழங்கியிருக்கிறார். அஞ்சலியும் அதைப் பயனடுத்திக் கொண்டிருக்கிறார்.
குட்டீஸ் பப்பு மற்றும் மோனிகா இருவரில் பப்புக்கு நடிப்பதற்கான நிறைய வாய்ப்பு.
யுவன் இசையில் பாடல்கள் ஒகே தான் என்றாலும் பின்னணி இசையில் அவருடைய ட்ரேட்மார்க் மிஸ்ஸிங். இருந்தாலும் படத்தில் கொஞ்சம் திகிலுணர்வைக் கொண்டு வர நிறைய மெனக்கெட்டிருக்கிறார். என்னாச்சு யுவனுக்கு??
மொத்ததில் சாதாரணமாகவே யாரும் பேச விரும்பாத, பேச மறுக்கிற ஆணவக் கொலையை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க துணிந்த இயக்குநர் சினிஷ் ஸ்ரீதரனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். அதிலும் அந்த க்ளைமாக்ஸ் டச் சூப்பர். தட்டித் தூக்குங்க ப்ரோ!
இன்னும் கொஞ்சம் பயமுறுத்தியிருந்தால் பலூன் உயரே உயரே பறந்திருக்கும்!