full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பனாரஸ் பல்கலை தேர்வில் சாணக்கியரின் ஜி எஸ் டி

உத்தரப்பிரதேசம் மாநிலம் பணாரஸ் நகரில் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு எம்.ஏ படிக்கும் மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘பண்டைய மற்றும் மத்திய இந்தியாவில் சமூக மற்றும் அரசியல் பார்வை’ என்ற பாடத்திற்கான தேர்வில், ‘சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் ஜி.எஸ்.டி குறித்து கட்டுரை எழுதுக’ என்று ஒரு கேள்வி இருந்துள்ளது.

இதேபோல, ‘உலகமயமாக்கல் குறித்து முதலில் சிந்தித்த இந்தியர் மனு – விவாதிக்க’ என்று மற்றொரு கேள்வி இருந்துள்ளது. சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மவுரியர்கள் காலத்தில் வாழ்ந்த சாணக்கியருக்கும் ஜி.எஸ்.டிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று தலையை பிய்த்துக்கொண்ட மாணவர்கள் இது தொடர்பாக ஆசிரியர்களிடம் புகாரளித்துள்ளனர்.

‘கேள்வித்தாளை தயாரித்தவர்களின் தவறு’ என்று தெரிவித்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம் இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.