full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

“Be Careful. நான் என்னைச் சொன்னேன்” : அஸ்வின்

‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்குப் பிறகு ‘திரி’ படத்தில் ‘சுப்பிரமணியபுரம்’ சுவாதியுடன் அஸ்வின் நடித்து இருக்கிறார். இதுபற்றி கூறிய அவர்…

‘‘கல்லூரி முடித்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் ஒரு இளைஞனை, அந்த கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம் பாதிக்கிறது. அது எந்த மாதிரி பிரச்சினையை சந்திக்க வைக்கிறது என்பது தான் ‘திரி’ படத்தில் என் பாத்திரம். இது அப்பா மகன் தொடர்பான கதை. எனது அப்பாவாக ஜெயபிரகாஷ் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தில் சுவாதி என்னுடன் நடிக்கிறார். அவர் எப்போதுமே துறுதுறு என்று இருப்பார். அவருடன் சேர்ந்து நடிக்கும் போது உஷாராக இருக்க வேண்டும். சின்னச்சின்ன வி‌ஷயங்களைக்கூட அழகாக வெளிப்படுத்துவார். எனவே, அவருடன் நடிப்பவர்கள் கவனமாக இல்லாவிட்டால் நடிப்பில் நம்மையும் மிஞ்சி மொத்த ‘ஸ்கோரை’யும் அவரே தட்டிச் சென்றுவிடுவார்.

இதுதவிர ‘வேதாளம் சொல்லும் கதை’ படத்தில் நடிக்கிறேன். இது திரில்லர் படம். இதில் வீடியோ கேம் டிசைனராக வருகிறேன். சென்னையில் ஆரம்பித்து பல்வேறு மாநிலங்களுக்கு கதை போகும். இதுவரை எந்த சினிமாவிலும் பார்க்காத கதையாக இது இருக்கும். இதற்காக நானும், குருசோமசுந்தரமும் நிறைய பயிற்சி செய்தோம். இது சர்வதேச படத்தின் உணர்வை அளிக்கும்‘’ என்றார்.