‘துப்பறிவாளன்’ மற்றும் ‘இரும்புத்திரை’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் விஷால்.
லிங்குசாமி இயக்கவுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணியை படக்குழு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
சென்னையில் உள்ள பின்னிமில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 500 கடைகள், கோவில் திருவிழா கொண்டாட்டம் என பிரம்மாண்டமான அரங்கமாக சுமார் 6 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த அரங்கில் சுமார் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள். அழகான மதுரையை போல் செட் அமைக்கிறார்கள்.
இப்படம் விஷாலின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.