full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கலைகட்டும் “பிக்பாஸ் 3″… உள்ளே யார் வர்றாங்கன்னு தெரியுமா..??

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி யில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ், இந்த வருடமும் நடைபெறவிருக்கிறது.

இந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை நடிகர் கமலே தொகுத்தும் வழங்கவிருக்கிறார். இம்மாதம் 23ம் தேதி முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி வருவதாக கடந்த சில நாட்களாக ஒரு தகவல் உலா வருகிறது. இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

படவாய்ப்புக்காக தன்னைப் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியவர் ஸ்ரீரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.