குவைத்திற்கு பணிக்காக சென்ற கிஷோரும் அவரது தம்பியும், செய்யாத ஒரு கொலை குற்றத்திற்காக சிறைக்குச் செல்கின்றனர். செய்யாத குற்றத்திலிருந்து விடுதலையாக இழப்பீடு தொகையையும் (ப்ளட் மணி) கிஷோர் தரப்பினர் கொடுத்து விடுகின்றனர்.ஐந்து வருட சிறை வாழ்க்கைக்குப் பிறகு இருவருக்கும் தூக்குத் தண்டனை கொடுக்கிறது குவைத் அரசாங்கம்.தனது இரு மகன்களை நாளை குவைத் அரசாங்கம் தூக்கிலிடப்போவதாகவும், இதுவரை அப்பா முகத்தையே காணாத பேத்தி இங்கு துடிப்பதாகவும் தஞ்சையில் இருந்து ஒரு தாயார் பேசும் வீடியோ அது.கிஷோரும் அவரது தம்பியும் தூக்கு மேடைக்குச் செல்ல 30 மணி நேரமே இருக்கும் நிலையில், தனது மீடியா திறமையை வைத்து ப்ரியா பவானி சங்கரும் சிரிஷும் அவர்களை காப்பாற்றினார்களா இல்லையா .?? என்பதே படத்தின் மீதிக் கதை…
பத்திரிகையாளராக நடித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். ஒரு செய்தியைச் சொல்லி அலுவலகத்தில் அவமதிக்கும் நேரத்தில் இயல்பாக முகபாவனையைக் காட்டுகிறார், கிஷோரின் மகள் பேசுவதைக் கேட்டு உருகுவதும் இலங்கை மண்ணில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைத் தேடிப்போய் பேசுவதும் என்று தன் பணியை நிறைவாகவே செய்திருக்கிறார் பிரியா.கிஷோரின் தாய், குழந்தை கிராமத்து மனிதர்கள் என்று பலரும் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு காட்சிகளின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. சதீஷ் ரகுநந்தன் பின்னணி இசை கதையின் பரபரப்பை நமக்குள் பாய்ச்சுகிறது. பயணம்.., அந்தாண்ட ஆகாசம் பாடல்கள் கலங்கச்செய்கிறது. குவைத்தில் தமிழர்களும் படும் கஷ்டங்களை வலுவான திரைக்கதையோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் சர்ஜுன்.