ஜீ5 ஒரிஜினல் படம் – ‘பிளட் மணி’ (Blood Money) திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Movies Press Meet
0
(0)

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும், ஜீ5 தமிழில் தொடர்ந்து தரமான வெற்றிப்படங்களை தந்து வருகிறது. தற்போது இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் பிரியா பவானி சங்கர், ஷிரிஷ், கிஷோர் நடிக்கும் ‘பிளட் மணி’ (Blood Money) திரைப்படத்தை வழங்குகிறது. இப்படம் டிசம்பர் 24 அன்று நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகிறது. இதனையொட்டி, படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்களுக்கு இப்படம் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில்

திரைக்கதை ஆசிரியர் சங்கர் தாஸ் பேசியதாவது…

“ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களுக்கு பிறகு இந்த மேடையில் உங்களை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி. இயக்குநர் நெல்சனுடன் இணைந்து வேகவேகமாக ஒரு திரைக்கதை எழுதினேன். அப்படி 28 நாட்களில் இந்த திரைக்கதையை எழுதினோம். மிகக் குறைந்த காலத்தில் ஒரு திரைக்கதை எழுத முடியும் என நம்பிக்கை கொடுத்த நெல்சனுக்கு நன்றி. அவரும் நானும் இணைந்து இந்த திரைக்கதையை எழுதினோம். அவர் பெயரை கூட வேண்டாம் என்று எனக்காக விட்டுக் கொடுத்து விட்டார். இந்தக் கதையில் ஒரு பெண் கதாபாத்திரம் ரொம்ப வலுவானது, அதில் மான்ஸ்டரில் நடித்த, பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்ற போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் இர்பான் மாலிக்கை முதல் முறையாக இங்கு தான் சந்திக்கிறேன், நெல்சனும் சர்ஜுனும் என்னை தயாரிப்பாளரிடம் கொண்டு செல்லவே இல்லை. சர்ஜூன் மிக நல்ல மனிதர், சினிமாவை நேசிக்க கூடிய மனிதர். இந்தப் படம் அவருக்கு வெற்றியாக அமையும்”.

தயாரிப்பாளர் இர்பான் மாலிக் பேசியதாவது…

“ஜீ5, இயக்குநர் சர்ஜூன் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும், எனக்காகவே நிறைய உழைத்திருக்கிறார்கள். இந்தப் படம் ஒரு அழகான படைப்பு, படம் பார்த்து விட்டு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி”.

நடிகர் அரவிந்த் பேசியதாவது….

“மேடையில், நாடகங்களில் நடிப்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது கடினம், எனக்கு வாய்ப்பளித்த சர்ஜூன் அவர்களுக்கு நன்றி. இந்தப் படம் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி”.

நடிகை பிரியா பவானி சங்கர் பேசியதாவது…

“மான்ஸ்டர் இயக்குனர் நெல்சன் அவரால் தான், இந்தப்படத்திற்குள் வந்தேன், அவருக்கு நன்றி. படத்தை சிறந்த அனுபவமாக மாற்றி தந்ததற்கு இயக்குநர் சர்ஜூனுக்கு நன்றி. ராமேஸ்வர வெய்யிலில் பல காட்சிகள் எடுத்தோம், எங்களை மிக அழகாக காட்டி பொறுமையாக இருந்ததற்கு ஒளிப்பதிவாளர் பாலா சாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். எங்களிடம் அழகான கதை இருக்கிறது. அதை உங்களிடம் காட்டுகிறோம், ஆதரவு தாருங்கள். ‘பிளட் மணி’ டிசம்பர் 24 அன்று நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகிறது, பாருங்கள். நன்றி”

இயக்குநர் சர்ஜூன் பேசியதாவது..

“எழுத்தாளருக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்றும், இயக்குனருக்கு எழுத்தாளர் ஆக வேண்டும் என்கிற கனவு தமிழ் சினிமாவில் தொடர்ந்து இருக்கிறது. ஆனால் அதை ஓடிடி மாற்றி வருகிறது இந்தப்படத்திற்குள் நான் வரும் போது கதை, திரைக்கதை ரெடியாக இருந்தது, நான் அதை திரையில் மட்டும் எப்படி கொண்டுவருவது என்பதை மட்டுமே செய்துள்ளேன். பிரியா பவானி சங்கர் மிகவும் புரபஷனலானவர். ஷூட்டிங்கில் ஒரு நாள் கூட எந்த தொந்தரவும் இல்லாமல், அவரது வேலையை சரியாக செய்து கொடுத்தார். மிக கச்சிதமாக நடித்திருக்கிறார். ஷிரிஷ், கிஷோர் உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். சூர்யா ராஜீவன் துபாய் செட், நியூஸ் ரூம் செட் எல்லாம் அட்டகாசமாக செய்து கொடுத்தார்.

ஒளிப்பதிவாளர் பாலமுருகன் மிக கடுமையாக உழைத்திருக்கிறார். கோவிட் எங்களையும் தாக்கியது. அதைத் தாண்டி, தயாரிப்பாளர் இர்பான் மாலிக் இப்படத்தை கொண்டுவந்துள்ளார். இப்படத்தை வெளியிடும் ஜீ5 க்கு நன்றி. எப்போதும் நீங்கள் நல்ல படத்திற்கு ஆதரவு தந்துள்ளீர்கள் இப்படத்தை பார்த்து விட்டு ஆதரவு தாருங்கள் நன்றி”.

சஸ்பென்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள ‘பிளட் மணி’ படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கிஷோர், ஷிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ வினோத் சாகர், ‘கலைமாமணி’ ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் உருவான இப்படத்தை எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் இர்பான் மாலிக் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.