டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம் தான் வருங்காலம் : பாபி சிம்ஹா

News

திருட்டு பயலே-2 படத்திற்கு பிறகு பாபி சிம்ஹா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் `கம்மர சம்பவம்’. மலையாளப் படமான இதில் திலீப், சித்தார்த், ஸ்வேதா மோகன், நமீதா பிரமோத் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படம் பற்றி பாபி சிம்ஹா பேசும் போது, “என் கதாபாத்திரத்தை பற்றி நிறைய கூற முடியாது. ஆனால் என்னுடைய சினிமா அனுபவத்தில், இதுவரை நான் பார்க்காத ஒரு கதாபாத்திரமாக நிச்சயம் இருக்கும். `கம்மர சம்பவம்’ ட்ரைலருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார்.

இதுதவிர விக்ரமுடன் இணைந்து `சாமி-2′ படத்திலும் நடிக்கிறேன். எனது நடிப்பில் `வல்லவனுக்கு வல்லவன்’ படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது. மேலும் எனது அடுத்த புதிய படம் பற்றிய அறிவிப்பு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சினிமாவை தவிர்த்து வெப் சீரீஸிலும் நடித்து வருகிறேன். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் வெப் சீரிஸில், தன்னுடன் காயத்ரி ஷங்கர், பார்வதி நாயர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் தான் வருங்காலமாக இருக்கக் போகிறது. சில நேரங்களில் என்னால் திரையரங்கில் படத்தை பார்க்க முடியாதபோது, பின்னர் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் சட்டத்திற்குட்பட்டு பார்க்க முடிகிறது. சினிமா டிக்கெட், பாப்கார்ன் விலையை கணக்கில் கொண்டால், நிச்சயமாக வெப் சீரீஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்” என்றார்.