full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வெப் சீரீஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் – பாபி சிம்ஹா

தொடர்ந்து வாழ்வது என்பது ஒரு சின்ன ஃபார்முலா தான், மாற்றங்களை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பது. மாறிய பிறகு தொடர்ந்து பரிமாணங்களை மாற்றிக் கொள்வது என்பது இன்றியமையாதது. குறிப்பாக அரிதாரம் பூசிய கலைஞர்களுக்கு ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் வித்தியாசத்தை காட்ட வேண்டிய சவால் இருக்கிறது. தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹாவுக்கும் இது பொருந்துகிறது. அவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் மலையாள படமான கம்மரசம்பவம் படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார். இந்த படத்தில் திலீப், சித்தார்த், ஸ்வேதா மோகன், நமீதா பிரமோத் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறார். 
 
அப்படிப்பட்ட சிறந்த நடிகர்களோடு இணைந்து நடித்திருப்பதால் அவரின் கதாபாத்திரத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. அதை பற்றி எதுவும் சொல்லக் கூடாது என்று அவர் இருந்தாலும், “என் கதாபாத்திரத்தை பற்றி நிறைய கூற முடியாது. ஆனால் என்னுடைய கேரியரில் இதுவரை நான் பார்க்காத ஒரு கதாபாத்திரமாக நிச்சயம் இருக்கும். கம்மரசம்பவம் ட்ரைலருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நிஜ வாழ்வில் நடந்த சம்பவங்களின் பின்னனியில் உருவான படமா? எனக்கேட்டால் ஓரிரு வாரங்கள் பொறுத்தால் உங்களுக்கே தெரிந்து விடும்” என்கிறார். 
 
வெப் சீரீஸ்
 
சாமி இரண்டாம் பாகம் ,  உட்பட மிகவும் எதிர்பார்க்கப்படும் பல  படங்களை வைத்திருக்கிறார் பாபி சிம்ஹா. மாறுபட்ட தோற்றங்களில் தோன்றுவதால் அவர் நடிக்கும் காட்சிகளை எடுக்க கால தாமதமாகிறது. வல்லவனுக்கு வல்லவன் படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது. அவரின் புதுப்படத்தை பற்றிய அறிவிப்பை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட இருக்கிறார். சினிமாவை தவிர்த்து வெப் சீரீஸ் நடித்திருக்கிறார். வெப் சீரீஸ் புதுமையான கதை அம்சங்களோடு சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரபு தயாரிக்க, காயத்ரி ஷங்கர், பார்வதி நாயர் ஆகியோர் என்னோடு நடத்திருக்கிறார்கள்.
 
டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் தான் வருங்காலமாக இருக்க போகிறது. சில நேரங்களில் என்னால் திரையரங்கில் படத்தை பார்க்க முடியாதபோது, பின்னர் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் சட்டத்திற்குட்பட்டு பார்க்க முடிகிறது. சினிமா டிக்கெட், பாப்கார்ன் விலையை கணக்கில் கொண்டால், நிச்சயமாக வெப் சீரீஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்” என்றார் பாபி சிம்ஹா.