full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 13.09.2017

* தமிழகம் உட்பட 24 மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் சர்வே நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

 

* கல்விமுறையை முன்னேற்றுவதில் உயர்நீதிமன்றம் எந்த சமரசமும் செய்து கொள்ளாது : நீதிபதி கிருபாகரன்.

*

நீதிமன்றத்தை அணுகி காவல்துறை மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். எங்களிடம் 21 எம்எல்ஏக்கள் உள்ளனர் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எங்களின் சிலீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் – டிடிவி. தினகரன்.

 

* திருமுருகன்காந்தி உள்ளிட்ட 4பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரும் வழக்கில் 19ல் தீர்ப்பு.

 

* 5 மாணவருக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்தது அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானம் : உயர்நீதிமன்றம்.

 

* தமிழகத்தில் ஆட்சியை அகற்ற காலம் கனிந்துவிட்டது மக்கள் அனைவரும் போருக்கு தயாராகுங்கள் – முக.ஸ்டாலின்.

 

* ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக தற்போதைய, அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவதாக பில்டப் கொடுக்கக் கூடாது – லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர்.

 

* தமிழக காவல்துறையை அனுப்பி கூர்க் விடுதியில் உள்ள எம்எல்ஏக்களிடம் பொய் வழக்கு போடுவோம் என்று மிரட்டுகின்றனர் – சென்னையில் டிடிவி.தினகரன் பேட்டி.

*

கூர்க்கில் தினகரன் ஆதரவாளர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு கர்நாடக போலீஸார் நோட்டீஸ்.

 

* டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தமிழக போலீஸ் மிரட்டுவதாகவும், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவு தர ஒரு எம்எல்ஏவிற்கு தலா ரூ. 20 கோடி வரை பேரம் பேசுவதாகவும் செந்தில் பாலாஜி எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

 

* சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சசிகலா கணவர் நடராஜனை மருத்துவமனையில் சந்தித்தார் டிடிவி.தினகரன்.

 

* ஆசிரியர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது ? : உயர்நீதிமன்றம் கேள்வி.

 

* 2018-க்குள் தொழில் துறையினர் பங்களிப்புடன் அரசு பள்ளிகளில் 10,000 கழிப்பறைகள் கட்டப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்.

 

* ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டம் நாளை முதல் தீவிரமடையும் : ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம்.

 

* சிபிசிஐடி சம்மனுக்கு ஆஜராகாததால், பழனியப்பன் எம்எல்ஏவை கைதுசெய்ய முயற்சிக்கிறார்கள், அவர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் டிடிவி.தினகரன்.

 

* கேரளாவில் நடைபெறவுள்ள சிபிஎம் கட்சி விழாவுக்கு தான் அழைக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போவதாக தகவல் வெளியான நிலையில் கமல்ஹாசன் விளக்கம்.

 

* ரூ.15,000 கோடி மதிப்பிலான தாவூத் இப்ராஹிமின் சொத்துகள் முடக்கம் : பிரிட்டன் அரசு அதிரடி நடவடிக்கை.

 

* பிரெக்சிட் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் : ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது.

 

* எடியூரப்பாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பச்சை பொய் : முதல்வர் சித்தராமையா தகவல்.

 

* நீட் பயிற்சி என்ற பெயரில் பணம் வசூல், தனியார் பள்ளிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்.

 

* சென்னையில் தற்போது காய்ச்சலின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது : அமைச்சர் விஜயபாஸ்கர்.

 

* தலைமைச் செயலகத்தில் சபாநாயகருடன் டிடிவி ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் சந்திப்பு.

 

* ரூ.40ஆயிரம், ரூ.50ஆயிரம் என ஊதியம் வாங்கிவிட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர் : உயர்நீதிமன்றம்.

 

* தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

 

* தமிழக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிரான சொத்து மேல்முறையீட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

 

* பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் ரவுடிகள், சமூக விரோதிகள் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் : உயர்நீதிமன்றக் கிளை.

 

* ஜனநாயக முறையில் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடப்படுகிறது – தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவு.

 

* போராடும் மாணவர்களைத் தாக்குவது மனித உரிமை மீறல் : ஜி.ராமகிருஷ்ணன்.

 

* கர்நாடகா : ஏலப்பூரில் கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு.

 

* தமிழக பொறுப்பு ஆளுநர் ஆளுங்கட்சிக்கு விசுவாசியாக இருக்கிறார் : முத்தரசன்.

 

* தமிழகத்தைத் தாக்க “நவோதயா பள்ளி” எனும் ஏவுகணை தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை.

 

* உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் பிபி.ராவ் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

 

* நீட் தேர்வை கண்டித்து டிடிவி தினகரன் திருச்சி உழவர் சந்தையில் பொதுக்கூட்டம் நடத்த திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

* ஜார்க்கண்ட் : சிங்பூம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் மாவோயிஸ்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை.

* ‘இர்மா’ புயல் : புளோரிடாவில் உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – கரீபியன் தீவில் 100 கைதிகள் தப்பி ஓட்டம்.

 

* தமிழக மகளிர் மேம்பாட்டு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நவ. 17-க்குள் நியமிக்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

 

* ஆளுநரின் உறுதியை ஏற்று நாளை வரை காத்திருப்பேன். என் மீதும், நடிகர் செந்தில் மீதும் திருச்சியில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் : டிடிவி தினகரன்.

 

* நெல்லை மாவட்டம் மேலநீலிதநல்லூரில் பணிஆணை வழங்க ரூ.21000 லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சுமணி கைது.