full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய முக்கியச் செய்திகள் 19.12.2017!

* ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில், சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் முரளிதரன் ஆஜர்.

* கொலையாளி நாதுராமின் நண்பர் தினேஷ் செளத்ரியை காவலில் எடுத்து சென்னை அழைத்துவர, தமிழக போலீசார் 2 நாட்களில் ராஜஸ்தான் பயணம்.

* 19 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்தாலும், தமிழகத்தில் ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தப்பின் வைகோ பேட்டி.

* ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்திற்கு ரூ 2,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் – பிரதமருக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
புயல் பாதிப்புக்களை பார்வையிட வரும் பிரதமரிடம் ரூ 2000 கோடி நிதி வழங்க முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் – ஸ்டாலின்.

* திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா மற்றும் பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

* மதச்சார்பின்மை என சொல்லிக்கொண்டு, மத உணர்வுகளை காங். தூண்டுகிறது – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரையில் பேட்டி.
ரூ 17,000 கோடியாக இருந்த தமிழகத்தின் கடன், பத்து ஆண்டுகளில் ரூ 3.17 ஆயிரம் கோடியாக உள்ளது – தமிழிசை சௌந்தரராஜன்.

* பவானிசாகர் அணை நீர்மட்டம் 71.10 அடி, நீர் இருப்பு 11.7 டிஎம்சி, நீர்வரத்து 766 கனஅடி, நீர் திறப்பு 2,450 கனஅடி.

* ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக பணப்பட்டுவாடா செய்த காவல்துறையினரின் பட்டியல் உள்ளது, திமுக ஆட்சியில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – ஸ்டாலின்.

* சென்னை மேயராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தபோது, ஆர்.கே.நகர் தொகுதிக்கு எந்த அடிப்படை வசதியையும் ஸ்டாலின் செய்யவில்லை – முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு.