full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 02/01/18 !

* 2018ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் தொடங்கியது : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியை தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் 300க்கும் மேற்பட்ட காளைகள், 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.

* சட்டப்பேரவையில் கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பேன் : டிடிவி தினகரன்.

* தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் – திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

* ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சசிகலா சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராகி விளக்கம் அளிப்பார்.

* உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நகராட்சி, மாநகராட்சி மறுவரையறை குறித்த ஆட்சேபங்கள் தெரிவிக்க அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பெரோஸ்கானிடம் திமுக மனு.

* முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கல் : அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் நிறைவேறுவதில் சிக்கல்.

* முத்தலாக் தடை மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் – நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அனந்த்குமார்.

* தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திறந்து வைத்தார்.

* அறிவியல் தொடர்பான தகவல் பரிமாற்றங்களை பிராந்திய மொழிகளில் உருவாக்க வேண்டும் : விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்.

* ஆர்கே.நகரில் திமுக முறையாக வாக்கு சேகரித்து இருந்தால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும். 2ஜி வழக்கில் சிபிஐ சரியாக செயல்படாததால் ஆ.ராசா, கனிமொழி விடுதலை : டிடிவி தினகரன்.

* ஆளுநர் ஆய்வு நடைமுறையில் இல்லாத ஒன்று. முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் பதவியை காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளனர். இனி வரும் தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது – டிடிவி.தினகரன்.

* ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா ஆஜர்.

* முதல்வர் பழனிசாமியின் உத்தரவின் பேரில் இந்த ஆண்டில் தமிழகத்தில் தடையின்றி ஜல்லிக்கட்டு நடைபெறும் – சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்.

* எம்ஜிஆரின் மதிய உணவுத் திட்டம், ஒன்றாக உணவருந்தும் மாணவர்களிடையே ஜாதி ஏற்றத்தாழ்வை ஒழிக்கிறது – தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

* தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்.

* ரஜினி கட்சியின் பெயர் பொங்கலன்று வெளியாகலாம் : ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் தகவல்.

* அனைவரும் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வாரத்தில் இரண்டரை மணி நேரம் தூய்மை பணிக்கு ஒதுக்க வேண்டும் – தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

* அதிமுக ஆட்சிகளையும் என்ற டி.டி.வி தினகரனின் கனவு பலிக்காது – அமைச்சர் கடம்பூர் ராஜு.

* இந்திய முறை முருத்துவர்கள் 105 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

* மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் போராட்டம்.

* தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 9 பேரும் அதிமுக கட்சிபொறுப்பில் இருந்து நீக்கம். தேனி மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து கே.கதிர்காமு விடுவிப்பு.

* டிரம்ப் ட்விட் எதிரொலி : அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்.

* தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்யாமல் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்துள்ளனர்.

* ஆங்கிலப் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பாராட்டு – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

* பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

* கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கூறியதாக பரவும் தகவலுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு : தகுதி வாய்ந்த யார் வேண்டுமானாலும் இந்தியாவில் தலைவராகலாம் என்று தான் கூறினேன் – நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம்.

* சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு வரும் 8ம் தேதி வரை காவல் – செங்கல்பட்டு நீதிமன்றம்.

* தஞ்சை : குழந்தையம்மாள் நகரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு.

* முதல்வர் பழனிசாமியை எம்எல்ஏக்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன்அன்சாரி ஆகியோர் சந்தித்து பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் – ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் கருத்து.

* மகாராஷ்டிரா : தானே பகுதியில் அதிகாலையில் நில அதிர்வு – ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு.

* டெல்லியில் கடும்பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவை பாதிப்பு; 6 விமானங்கள், 21 ரயில்கள் ரத்து.

* தஞ்சாவூரில் ஆய்வுக்கு வந்த ஆளுநருக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு : திமுகவினர் 1000 பேர் கருப்புச்சட்டை அணிந்து கறுப்புக்கொடி ஏந்தி ஊர்வலம்.

* டிச.31 மற்றும் புத்தாண்டு தினத்தில் ரூ.211 கோடிக்கு மது விற்பனை : கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் மதுபானங்களின் விலை 10% முதல் 12% வரை அதிகரித்த போதிலும், ரூ.36 கோடிக்கு கூடுதல் விற்பனை.

* சென்னை புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்துகளில் சிக்கி 3 பேர் பலி 300 இளைஞர்கள் காயம்.

* பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம் : கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

* தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை எதிர்த்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் : திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூடல்.

* திருச்சி : மணப்பாறை அருகே போடுவார்செட்டியில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் யுவராஜா என்ற பள்ளி மாணவன் உயிரிழப்பு.

* சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் நாளை நடத்த உள்ள போராட்டத்திற்கு மதிமுக ஆதரவு : வைகோ.

* திருச்சி சிறையில் மூச்சுத்திணறல் காரணமாக கைதி உயிரிழப்பு.

* எட்டயம்மன் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் திவ்யா அறிவிப்பு.

* நாட்டில் எந்த மாநிலத்திலும் மதிய உணவு திட்டம் நிறுத்தப்படவில்லை : மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் உபேந்திரா குஷ்வஹா மக்களவையில் தகவல்.

* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பெட்ரோல் குண்டு வீசுவோம் என்று கோயில் இணை ஆணையருக்கு கடிதம் வந்ததால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.

* கும்பகோணம் : பாபநாசத்தில் இரு சக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து அரசு கால்நடை உதவி மருத்துவர் பார்த்திபன், சீனிவாச பிரபு ஆகியோர் உயிரிழந்தனர்.

* தேனி: ஆண்டிபட்டி அருகே ராமலிங்கபுரம் கிராமத்தில் முன்விரோதம் காரணாமாக டீக்கடை உரிமையாளர் மற்றும் அவரது மகள் கார் ஏற்றி கொலை.