full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 05/02/18 !

* தமிழ்வழிக் கல்வி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இனி ஊக்கத்தொகை வழங்கப்படும். – அமைச்சர் செங்கோட்டையன்.

* காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் : 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.

* தமிழக மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை.

* பொதுத்தேர்வுகள் முடிந்ததும் தினசரி நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கும். தேர்வுகள் மூலம் 2000 மாணவர்களை தேர்வு செய்து சென்னைக்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்கத்திட்டம் – தமிழக பள்ளிக் கல்வித்துறை.

* உச்சநீதிமன்ற உத்தரவால் மணல் தட்டுப்பாடு நீங்கும், மணல் விலை குறைய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் சி.வி.சண்முகம் தந்தி டிவிக்கு பேட்டி.

* உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் 10 மாதங்களில் 1142 என்கவுண்டர்கள்.

* அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி. கமிஷனர் அலுவலகத்தில் ஜெ.தீபா மீது புகார்.

* நிலம் கையகப்படுத்தியதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்காததால் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவு : நீதிமன்ற உத்தரவையடுத்து ஜப்தி செய்ய அதிகாரிகள் வந்துள்ளதால் பரபரப்பு.

* சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கக் கோரி ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தம் வெற்றி பெற்றது. காவிரியில் இருந்து நமக்கு வர வேண்டிய 250 டிஎம்சி நீரை எக்காரணத்தை கொண்டும் விட்டுத்தரமாட்டோம் – அமைச்சர் ஜெயக்குமார்.

* தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், சேலம் ஆகிய இடங்கள் குழாய் மூலம் இயற்கை எரிவாயு அமைக்க சாத்தியமுள்ள புவியியல் இடங்களாக உள்ளன – பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தகவல்.

* பிப்.10 முதல் 12 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் – வெளியுறவுத் துறை.

* காவிரி டெல்டா பகுதிகள் வறண்டு போனதற்கு மத்திய பாஜக அரசே காரணம். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மேலாண்மை வாரியம் அமைக்காததால் டெல்டா பகுதி பாதிப்பு – முக.ஸ்டாலின்.

* கர்நாடக அரசு காவிரி நீரை திறந்துவிடக் கோரி தமிழக எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் தர்ணா செய்ய வேண்டும் – பாமக எம்பி அன்புமணி.

* பெங்களூருவில் பிரதமர் மோடி நிகழ்த்திய உரை பொய்கள் நிறைந்தவை – கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு.

* பொது, தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை.

* தமிழகத்தில் மீத்தேன் அல்லது ஷேல் காஸ் உட்பட எந்த திட்டமும் நடைபெறவில்லை – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

* தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

* 7 நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்.

* உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியாது. உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையமே நடத்துகிறது – தேர்தல் ஆணையம் பதில் மனு.

* மார்ச் 1 ஆம் தேதி முதல் தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம் தமிழ் படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இல்லை – தயாரிப்பாளர்கள் சங்கம்.

* செம்மரம் கடத்தியதாக தமிழக மருத்துவ மாணவர் மீது வழக்குப்பதிவு : ஆந்திர போலீஸ் அத்துமீறல்.

* கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கைது விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் நடவடிக்கை – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.

* மின் ஊழியர்களை பேச அழைக்கும் போதே, ஒரு சில சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பது உள்நோக்கம் கொண்டது – அமைச்சர் தங்கமணி.

* ராமநாதபுரம்: தனுஷ்கோடி அருகே இலங்கையை சேர்ந்த பைபர் படகு கரை ஒதுங்கியது. இலங்கை படகை கைப்பற்றிய சுங்கத்துறையினர் படகில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை.

* புதுக்கோட்டை மாவட்டம் ஆதனகோட்டை அருகே கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்து. காரில் சென்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

* தமிழக எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்.

* கிருஷ்ணகிரி : சின்னாறு பகுதியில் ஒற்றை காட்டுயானை தாக்கியதில் தேவன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

* கிருஷ்ணகிரி அருகே வனப்பகுதியில் முகாமிட்ட யானை, 3 மயக்க ஊசி செலுத்தப்பட்ட பின் பிடிக்கப்பட்டது.

* ஜனாதிபதி மாளிகையை அலங்கரிக்கும் முகல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக பிப்.6-ம் தேதி முதல் 1 மாதம் மட்டும் திறக்கப்படுகிறது.

* கிரிக்கெட் விளையாட ஸ்ரீ சாந்த்க்கு ஆயுட்கால தடை விதித்தது பற்றி 4 வாரத்தில் பதிலளிக்க பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 10க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் ரகசிய ஆய்வு.

* வேலூர் திருப்பத்தூர் அருகே தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய 11ம் வகுப்பு மாணவன் தப்பியோட்டம்.

* மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து தொடர்பான காரணம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

* வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதைவிட, பகோடா விற்பனை செய்வது மேல் – அமித்ஷா.

* வைரமுத்துவின் தமிழை ஆண்டாள் கட்டுரைக்கு தடை கோரிய வழக்கை தமிழ் தெரிந்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிப்பதே முறையாக இருக்கும் – தலைமை நீதிபதி அமர்வு.

* பைனான்சியர் போத்ராவின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என ரஜினி பதில் மனு தாக்கல் சுத்தமான கரங்களுடன் போத்ரா நீதிமன்றத்தை நாடவில்லை என மனுவில் ரஜினிகாந்த் குற்றச்சாட்டு.

* மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு.

* போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன்.

* மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள கடைகளால் பாதிப்பு என்றால், அனைத்து கடைகளும் முழுமையாக அகற்றப்படும் – துணை முதலமைச்சர்.

* மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் அம்மனுக்கு சுடிதார் அணிவித்த புகாரில் குருக்களை பணிநீக்கம் செய்து திருவாவடுதுறை ஆதீனம் உத்தரவு.