full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 06/02/18 !

* கச்சதீவு அருகே 2 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை மீன்பிடிக்கவிடாமல் விரட்டி அடித்ததாக மீனவர்கள் புகார்.

* ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது -சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சிவி.சண்முகம்.

* பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் பெறுவதற்கு வரும் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் பெண்களுக்காக காலக்கெடுவை நீடிப்பு – தமிழக அரசு.

* எனக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசையில்லை, நான் கூறும் 6 அமைச்சர்களை நீக்கி விட்டு எங்களுடன் இணைந்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன் – டிடிவி.தினகரன்.

* ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி வரும் கதிராமங்கலம் மக்களுடன் டிடிவி.தினகரன் சந்திப்பு.

* காஷ்மீர் ஸ்ரீநகர் மருத்துவமனையில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு ஒரு காவலர் உயிரிழந்ததாகத் தகவல் 2 காவலர்கள் படுகாயம்.

* மாநில அரசு அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் புகார் : திரிணாமுல் காங். தொடர்ந்து முழக்கமிட்டதால் மாநிலங்களவை 2 மணிவரை ஒத்திவைப்பு.

* குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கை பிப். 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

* பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக பிப்.13ல் அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன கூட்டங்கள் நடைபெறும் – திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின்.

* ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு பதில்மனு தாக்கல்.

* துணை வேந்தர்களின் முறைகேடுகளை தடுப்பதற்காக பல்கலைக் கழகங்களில் பணி நியமனங்களுக்கு தனி தேர்வு வாரியம் அமைக்க தமிழக அரசு முடிவு.

* நீட் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசை தட்டிக் கேட்க வேண்டிய எதிர்க்கட்சி தூங்குகிறது – பாமக நிறுவனர் ராமதாஸ்.

* அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அக்னி-1 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா : ஒடிசாவில் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை 700 கி.மீ. தொலைவில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கியது.

* மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து தொடர்பாக, தமிழக அரசு வரும் 24 மணி நேரத்திற்குள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – ஹெச்.ராஜா.

* திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவோம், முடியாவிட்டால் நீட் தேர்வில் காப்பியடிக்க மாணவர்களை அனுமதிப்போம் – முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு.

* தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வலியுறுத்தி மாநிலங்களவையில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேசினார்.

* ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள ஆயுள் கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு. 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆண்டுகள் நிறைவடையும் ஆயுள் கைதிகளை விடுவிக்கவும் தமிழக அரசு முடிவு.

* ஆண்டாள் விவகாரத்தில் ஆதரவு : தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் நன்றி.

* பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் – தனியார் கல்லூரிகளின் கூட்டமைப்புத் தலைவர் கலீல்.

* நெல்லை : சங்கரன்கோவிலில் அரசுப்பேருந்தின் டயர் வெடித்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஒருவர் பலி.

* மாலத்தீவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கைது : அவசர நிலை பிரகடனத்தை அடுத்து அதிரடி நடவடிக்கை.

* நாமக்கல் மாவட்டம் சோழசிராமணியில் இருந்து கோவைக்கு உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற 6 லாரிகள் ஈரோடு அருகே பறிமுதல்.

* உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோவில் நடைபெற்ற பரிசோதனையில் கடந்த மாதம் மட்டும் 40 பேருக்கு எச்ஐவி கிருமி பாதிப்பு இருப்பது கண்டுபிடிப்பு.

* தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,548 கோடி நிதி ஒதுக்கீடு – ரயில்வே அமைச்சகம்.