full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்பு செய்திகள் 08/12/17 !

* புயலால் மாயமான மீனவர்களை மீட்கக்கோரி தேங்காய்பட்டினம் சந்திப்பில் மீனவர்கள் மீண்டும் போராட்டம் : இனயம், புத்தன்துறை, ராமன்துறை, முள்ளூர்துறை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

* கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 தொடக்கப்பள்ளி, 9 நடுநிலை பள்ளி கட்டடங்கள் பாதிப்பு. 14 கட்டடங்களில் பழுது நீக்கம், 13 கட்டடங்களில் பழுது நீக்கம் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது – தமிழக அரசு.

* கன்னியாகுமரி : காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி குளச்சலில் நடந்து வந்த மீனவர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்.

* ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு உதவி ரூ.2 லட்சம் உட்பட தலா ரூ10 இலட்சம் வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

* ஜெயலலிதா கைரேகை ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு இடைக்கால தடை – உச்சநீதிமன்றம்.

* வங்கிக்கணக்கு, செல்போன், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிப்பு – மத்திய அரசு.

* பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவின் கைரேகையை வாங்கவில்லை: உயர்நீதிமன்றத்தில் சிறை அதிகாரி மோகன் ராஜன் விளக்கம்.

* ஸ்மார்ட் கார்ட் இல்லையென்றாலும் ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் வழங்கப்படும் – உணவுத்துறை தகவல்.

* குஜராத் அரசு சிறப்பாக செயல்படுவதால், அதனை நாங்கள் மக்களுக்கு விளக்க வேண்டிய தேவை இல்லை. பொருளாதார வளர்ச்சியில் குஜராத் மாநிலம் முதலிடம் வகித்து வருகிறது – அருண் ஜெட்லி.

* நாடெங்கும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்தக்கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

* இந்து கோவில்கள் தொடர்பான திருமாவளவனின் பேச்சு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் – அர்ஜூன் சம்பத், இந்து மக்கள் கட்சி.

* இந்து கோவில்களை இடிக்குமாறு நான் பேசவில்லை – திருமாவளவன்.

* மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போரிட திருநங்கைகளை கான்ஸ்டபிள் பணிகளில் நியமிக்க சத்தீஸ்கர் மாநில காவல்துறையினர் முடிவு.

* சேகர் ரெட்டி டைரியில் பெயர் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் – திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

* தான் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை டைரி என்ற பெயரில் வெளியாகி உள்ள காகிதத்தில் இருப்பது தம் கையெழுத்து அல்ல – சேகர்ரெட்டி பேட்டி.

* ஆர் கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலை முன்மொழியவில்லை : தீபன், சுமதி தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் அளித்த வீடியோ காட்சிகள் வெளியீடு.

* ஆர் கே நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பரப்புரை செய்கையில் பாட்டில் வீசியதாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு.

* ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கு டிச. 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு : மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர் பிரதாப் ஆஜராக கால அவகாசம் கோரியதால் வழக்கு ஒத்திவைப்பு.

* வெளிமாநிலங்களில் உள்ள மீனவர்கள் தமிழகம் திரும்ப அவர்களின் தேவைக்காக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்.

* என்னுடைய அடுத்த கட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன். ஆதிக்க அரசியல் சக்திகளால் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு என்னுடைய மனு நிராகரிப்பு. ஆர் கே நகரில் எனக்கு நேர்ந்த அநீதிக்கு மக்கள் மன்றமே சாட்சி – நடிகர் விஷால்.

* திருப்பதியில் வரும் ஜனவரி முதல் ஒரு ஆதார் எண்ணுக்கு ஒரு விஐபி டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் – தேவஸ்தான இணை அதிகாரி அறிவிப்பு.

* திருப்பூரில் உள்ள தனியார் ஓட்டலை அபகரித்ததாக, நளினி சிதம்பரத்தின் தங்கை பத்மினி மீது சிபிஐ முதற்கட்ட குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளது.

* சிறுமி ஹாசினி, தாயை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தஷ்வந்த் மும்பையில் மீண்டும் கைது.

* சேலம் மேட்டுத்தெருவில் அசாருதீன் என்பவரை கொலை செய்த வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.

* கடற்படை, கடலோர காவல்படை, விமானப் படைகள் மூலம் மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது – அமைச்சர் ஜெயக்குமார்.

* கடலூர் : காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தை சந்தித்து மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்கள் ஆறுதல் கூறினார்.