full screen background image
Search
Monday 25 November 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்பு செய்திகள் 09/12/17 !

* நடுக்கடலில் தமிழக மீனவர்களின் சடலங்கள் மிதப்பதாக கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் பேட்டி.

* மீனவர்கள் மீட்பு நடவடிக்கை மற்றும் கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி நாகையில் நாளை மறுநாள் பேரணி நடத்த 50 கிராம மீனவர்கள் முடிவு.

* ஒகி புயலால் உயிரிழந்த நாகை, தூத்துக்குடி மீனவர்கள் சபினன், ஜூடு ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

* சென்னை ஆர்கே.நகருக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில் தேர்தல் அதிகாரி வேலுசாமி மாற்றப்பட்டுள்ளார். புது அதிகாரியாக பிரவீன் நாயர் நியமனம்.

* டிசம்பர் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு ஆர்கே.நகர் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை : தேர்தல் ஆணையம்.

* டெல்லி : மூன்றரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் மத்திய பா.ஜ.க. அரசு விளம்பரங்களுக்காக மட்டும் 3 ஆயிரத்து 755 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

* டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா, ராஜ்நாத் சிங்குடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு. புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மத்திய அமைச்சர்களிடம் பினராயி விஜயன் நேரில் வலியுறுத்தல்.

* ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்த தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு : வரும் செவ்வாய்கிழமை, தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வு முன்பு இறுதி விசாரணை.

* ஆர்கே நகரில் அனுமதிக்கப்படாத வாகனங்களுக்கு அனுமதி தந்தால் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி வழங்கப்படாத நபர்கள் வேட்பாளருடன் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் போலீஸ் மீது நடவடிக்கை : தேர்தல் ஆணையம்.

* ஆர்கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள துணை ராணுவத்தினர் சென்னை வந்து சேர்ந்தனர்.

* சேகர் ரெட்டி விவகாரம் : மூத்த பத்திரிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்ட அதிமுக ஐடி விங்.

* எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தமிழகமெங்கும் கொண்டாடும் தமிழக அரசிற்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

* ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக விவசாயிகள் பிரசாரம் : பிஆர்.பாண்டியன்.

* ஆர்கே.நகர் என்பது அதிமுகவின் எஃகு கோட்டை யாராலும் அழிக்கமுடியாது : அமைச்சர் செங்கோட்டையன்.

* தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டது போன்று ஆர்கே.நகரில் பணப்பட்டுவாடாவையும் தடுக்க தேர்தல் ஆணையம் விழிப்போடு செயல்பட வேண்டும் – திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

* அதிமுக அரசில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது என தமிழக ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து புகார் மனுவை அளித்தார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.

* நாமக்கல் : பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் திருமாவளவன் மீது விஸ்வ ஹிந்து பரிசத் சார்பில் புகார்; இந்து கோயில்களை இடிக்க வேண்டும் என பேசியதாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

* விசிக தலைவர் திருமாவளவனின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு என அறிவித்த இந்து முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் கோபிநாத் திருப்பூர் போலீசார் கைது செய்யப்பட்டார்.

* தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிச.23 முதல் ஜனவரி முதல் வாரம் வரை விஐபி தரிசனம் ரத்து : தேவஸ்தானம்.

* அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் : குற்றாலத்தில் 2-வது நாளாக குளிக்கத் தடை.

* குஜராத்தில் 150-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றுவோம் : குஜராத் பாஜக தலைவர் ஜிது வகானி.

* ஆர்கே.நகர் தேர்தலை விட முக்கியமான, கன்னியாகுமரி மீனவர்கள் பிரச்சினையில் இனி கவனம் செலுத்துவேன் – நடிகர் விஷால்.

* செங்கோட்டை அருகே அடவிநயினார் அணை நிரம்பியது.

* டிசம்பர் 14, 15ம் தேதிகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக தொ.மு.ச போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவிப்பு.

* மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம். வைகை ஆற்றில் குளிக்கவோ, கரையோரம் நின்று செல்ஃபி எடுக்கவோ வேண்டாம் : ஆட்சியர் வீரராகவராவ்.

* ஆர்கே.நகரில் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து இதுவரை ரூ.3.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

* சிறுமி ஹாசினி, தனது தாயை கொலை செய்த வழக்கில் தப்பி கைதான தஷ்வந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவு.

* ஒகி புயலால் புதுச்சேரி மீனவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. கோப்புகள் தேக்கி வைக்கப்படுவது மட்டும் நலத்திட்டங்களை தடுப்பது இல்லை – புதுவை முதல்வர் நாராயணசாமி.

* தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான ஸ்குவாஷ் போட்டியில் தமிழக அணி சாம்பியன்.