* ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
* ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் உள்ள ஆக்திப்பா மாவட்டத்தில் சோதனைசாவடிகள் மீது தலிபான்கள் நடத்திய பயங்கர தாக்குதலில் 15 பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழப்பு.
* குழந்தை தொழிலாளர் இல்லா உலகை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்க வேண்டும்.குழந்தை தொழிலாளர் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் : தமிழக முதலமைச்சர்.
* நிலஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக பதிலளிக்க ஆதினங்களுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
* ஸ்டெர்லைட் ஆலை மூடலால் வேலை இழந்தோருக்கு வேறு தொழிற்சாலைகளில் பணி வழங்க ஏற்பாடு : தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப்.
* தூத்துக்குடி வன்முறையில் தொடர்பில்லாத மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது; குமரெட்டியாபுரம் கிராம மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு
* ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அமைதிவழியில் போராடிய மக்களை விடுதலை செய்ய வேண்டும் – கிராம மக்கள்.
* அரசு கேபிளில் புதிய தலைமுறையை 124 வது இடத்தில் இருந்து 499வது இடத்துக்கு மாற்றியது அற்பத்தனம்.புதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது பத்திரிகை சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் செயல் – கனிமொழி எம்பி.
* நாகரீகமாக, அமைதியாக நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் அமீருக்கு கொலை மிரட்டல் வருகிறது – பாரதிராஜா.
* சேதமடைந்த வீடுகளை இடித்துவிட்டு கட்டப்படும் புதிய வீடுகள் அங்கு குடியிருந்தவர்களுக்கே வழங்கப்படும் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
* சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி : தமிழக முதல்வர் பழனிசாமி.
* தூத்துக்குடியில் நடந்தது போல சேலம் போராட்டம் மாறிவிடக்கூடாது – முக.ஸ்டாலின் எச்சரிக்கை.
* 2019 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன்சமாஜ்வாதி கட்சிக்கு கூடுதலாக சில தொகுதிகளை ஒதுக்கியாவது பாஜகவை வீழ்த்துவோம் : அகிலேஷ்யாதவ்.
* நடுநிலையோடு அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதால் ஆத்திரம் கொண்டுள்ள அதிமுக அரசு ஊடகங்களை மிரட்டும் நோக்கில் வழக்கு – மதிமுக.
* டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்ற வருகைப்பதிவு 10%க்கும் குறைவாக இருப்பதாக எம்எல்ஏ கபில் மிஸ்ரா வழக்கு.
* தூத்துக்குடியில் வாகனங்களுக்கு தீ வைத்த விவகாரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது.
* மோடி செல்வாக்கு சரிந்து வருவதால் பிரணாப்பை பிரதமர் வேட்பாளராக்க ஆர்எஸ்எஸ். திட்டம் : சிவசேனா பரபரப்பு தகவல்.
* பத்திரிக்கைத்துறைக்கு அதிமுக அரசு மதிப்பளித்து வருகிறது.பத்திரிக்கை சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு – அமைச்சர் ஜெயக்குமார்.
* இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படும் குடிசை மாற்று வாரிய வீடுகளை உரியவர்களுக்கு வழங்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் வலியுறுத்தல்.
* ஜூலை முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா.
* புதிய தலைமுறை மீதான வழக்கை உடனே ரத்து செய்ய முதல்வரை கேட்டுக்கொள்கிறேன் – முக.ஸ்டாலின்.
* இன்று முதல் தமிழகம் முழுவதும் எம்பிபிஎஸ் , பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க ஜூன் 19ம் தேதி கடைசி நாள்.
* டிடிவி தினகரனுக்கு மாஸ்டரே திமுக செயல் தலைவர் தான் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு.
* ஊடகம் மீது நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தின் முக்கிய அங்கம்
கருத்து சுதந்திரம் இல்லாத நாடு ஜனநாயகத்திலிருந்து நழுவி விடும் – மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
* எங்கள் கட்சியில் பிரதமர் மோடியும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மட்டுமே ஊழல் செய்யாதவர்களாக உள்ளனர் மற்றவர்கள் குறித்து என்னால் உறுதியாக சொல்ல முடியாது – பாஜக எம்பி பிரிஜ்பூஷண் சரண்.
* கீழடி ரகசியங்கள் : அமெரிக்கா செல்ல தொல்லியல் அறிஞர் அமர்நாத்துக்கு அனுமதி மறுப்பு.
* பணமோசடி செய்துவிட்டு பிரிட்டனில் தங்கியுள்ள நிரவ் மோடி அந்நாட்டிடம் அடைக்கலம் கோரியுள்ளதாக தகவல்.
* 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனத் திருத்தச் சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
* டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்தாலும், ரொக்க பண பரிமாற்றத்தை தடுக்க முடியாது.
ரூபாய் நோட்டு விவகாரத்தால், தமிழகத்தில் மட்டும் 1 வருடத்தில் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர், திருப்பூரில் ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு – ப.சிதம்பரம்.
* ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் லாரி மோதியதில் 6 கல்லூரி மாணவர்கள் பலி.
* அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பாஜகவை பலபடுத்த முயற்சி – தமிழிசை சௌந்தரராஜன்.
* திருப்பதி மலையில் உள்ள அம்மா குண்டா வனப்பகுதியில் 5 யானைகள் முகாமிட்டுள்ளதால் ஏழுமலையான் கோவில் பின்புறம் உள்ள ஸ்ரீவாரிபாதம் பகுதிக்கு செல்லும் சாலை மூடப்பட்டது.
* ஜிஎஸ்டி வரி விதிப்பால் உள்ளூர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கடும் சரிவு.பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது : ப.சிதம்பரம்.
* புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதம்.
* நீட் நுழைவுத் தேர்வை திரும்பப் பெரும் வரை சமூகநீதிக்கான போராட்டம் தொடரும் : சென்னையில் நடந்த மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
* செயற்கைக்கோள்கள் – ராக்கெட்டுகள் உருவாக்க ரூ.10,400 கோடி ஒதுக்கீடு : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்.
* காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 10 பேர் கைது.
* சங்கரன்கோவில் அருகே 7 வயது சிறுமி கொலை : கைதான அண்ணன், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பு.
* கோவை நீதிமன்ற நீதிபதி செல்வப்பாண்டி மனைவியிடம் தாலிச்செயின் பறிப்பு.
* கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 13 பேர் பலி.
* 3வது நாளாக, நெல்லை களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை மறு உத்தரவு வரும் வரை தடை தொடரும் : முண்டன் துறை புலிகள் காப்பக இயக்குநர்.
* கன்னியாகுமரியில் விடிய விடிய பெய்த கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு. மழையால் ஒரே நாளில் பேச்சிப்பாறை அணை 3.20 அடியாகவும். பெருஞ்சாணி அணை 4 அடியாகவும் உயர்ந்துள்ளது.
* ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகம் மற்றும் கடலூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கதேசம் அருகே காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.